மரியாதைகள் Jeffersonville, Indiana, USA 61-1015E 1சற்று முன்பு நான் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த போது, அதை தேவனுடைய கரங்களில் ஒப்படைத்து விட்டேன் ... எனக்கு தொண்டை சிறிது கரகரப்பாயிருந்ததை உணர்ந்தேன், எனக்கு ஜலதோஷம் உள்ளது. நான் நினைத்தேன். நான் வரக்கூடிய அளவுக்கு என் தாய்க்கு சுகமிருந்தால், இங்கு வந்து உங்களை சந்திப்பேன் என்று எண்ணினேன். என் தாய் அங்கு படுத்துகிடக்கும்போது, இங்குள்ள தாய்மார்களும், தந்தை மார்களும், நாமெல்லாருமே அந்நிலையை அடைய வேண்டியவர்களாயிருக்கிறோம் என்பதை அறிந்தவனாய், என் தாய் போவதற்கு ஆயத்தமாயிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது, நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 2வேறொரு காரியத்தை நான் சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். சகோதரி வில்ஸனை பின்பக்கத்தில் கண்டேன் என்று நினைக்கிறேன். சகோதரி, சகோதரன் சாத்மன் இருவரும் இக்கட்டிடத்தில் எங்கோ இருக்கின்றனர். நீங்கள் அநேகர் இரவில் என் தாயின் அருகில் உட்கார்ந்து அவர்களை கவனித்தும், இன்னும் மற்ற காரியங்களையும் செய்து உதவிபுரிந்து வருகின்றீர்கள். அது மிகவும் விசுவாசமுள்ள செயல். நீங்கள் அனைவரும் செய்யும் உதவியைப் பாராட்டுகிறேன். உண்மையில் எங்கள் குடும்பம் மிகவும் களைத்துப் போயுள்ளது. ஒவ்வொரு இரவும் நாங்கள் அங்கு தங்குகிறோம் என்பது நீங்கள் அறிந்ததே. இப்பொழுது எங்கள் குடும்பத்தின் பெரும்பாலோர் வேலைக்குச் செல்கின்றனர். எனவே மேடாவும் நானுமாக - கூட டீலோரும். அவள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். எனவே ஆஸ்பத்திரியில் அம்மாவை கவனித்துக்கொள்ளும் வேலையை நாங்கள் இருவர் மாத்திரமே பங்கிட்டுக்கொள்ளும்போது, நாங்கள் களைத்துப்போகிறோம். எங்கும் செல்லமுடிவதில்லை. இரவு எது, பகல் எது என்று கூட எங்களுக்குத் தெரிவதில்லை. முக்கியமாக, நானும் மேடாவும் அடைந்துள்ள வயதில், நாங்கள் களைத்துப்போக அநேக இரவுகள் அவசியமில்லை - சற்று வயதாகும்போது. 3நான் ஓய்வின்றி இரவும் பகலும் கழித்த நாட்கள் என் நினைவுக்கு வருகிறது. நான் கலிபோர்னியாவிலிருந்து என் பழையடி. மாடல் ஃபோர்டுகாரை ஓட்டிக்கொண்டு வருவேன். அப்பொழுது வழியில் எனக்கு தூக்கம் வரும். இங்கு அடைய நான்கு அல்லது ஐந்து நாட்கள், ஒரு வேளை ஏழு நாட்கள் பிடிக்கும். நான் இரவும் பகலும் காரோட்டிக் கொண்டு வருவேன். நான் சிறிது களைப்படைந்தால், காரை புல்தரைக்கு ஓட்டிச்சென்று கம்பளத்தை காருக்கு கீழே விரித்து, சில மணி நேரம் உறங்கிவிட்டு, மறுபடியும் தொடர்ந்து போவேன், சகோ. நெவில், நான் அப்போதைக் காட்டிலும் அதிகம் மாறிவிட்டேன். நான் இருபத்தைந்து வயதைக் கடந்து விட்டேன் என்பதை உணருகிறேன். 4இன்றிரவு கர்த்தருடைய வீட்டில் இருப்பது ஒரு சிலாக்கியம். கர்த்தர் எனக்கு அளித்தவைகளை எழுதிவைத்த குறிப்புகள் இன்று காலை என்னிடம் இருந்தது. எனக்குத் தருணம் கிடைத்தால், வியாதியஸ்தருக்கு ஜெபிப்பதற்கு முன்பு, இன்று காலை இதைக் குறித்து பேசலாமென்று எண்ணினேன். ஆனால் இன்று காலை கேள்விகளுக்கு விடையளித்ததினால் தாமதமாகி விட்டது. எனவே அம்மாவுக்கு உடல்நிலை சற்று தேறியிருந்தால் இன்றிரவு இங்கு வந்து, அது சகோ. நெவிலின் திட்டத்தை பாதிக்கா விட்டால், சற்று நேரம் பேசவேண்டு மென்பதற்கு அதுவே அறிகுறியாயிருக்கும் என்று கருதினேன். 5நான் அறையில் நின்றுகொண்டிருந்த போது, இன்றிரவு நமது மத்தியிலுள்ள ஒரு கிறிஸ்தவ சகோதரி என்னிடம் கூறின அற்புதமான சாட்சியைக் கேட்டேன். இன்று காலை அவள் ஜெபவரிசையில் நின்று கொண்டு யாரோ ஒருவருக்காக ஜெபம் செய்து கொண்டிருந்தாள். அவளுடைய இருட்டு அறையில், கடைசி இராப்போஜனம் படம் தொங்கிக்கொண்டிருக்கிறது. அதன்மேல் சூரிய வெளிச்சம் பட வழியேயில்லை. இன்று பகல் மூன்று மணிக்கு, நாம் சபை காலங்களைக் குறித்து பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தபோது இங்கு தோன்றின அந்த ஒளிவட்டம், வானவில் வர்ணங்களுடன் அந்த படத்திலிருந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தலையின் மேல் அமர்ந்ததாம். அவள் சிறிது நேரம் அதை கவனித்துவிட்டு, அவளுடைய சகோதரியிடம் சென்று அறிவித்தாளாம், அப்படித்தான் நான் இந்த சம்பவத்தைக் குறித்துக் கேள்விப்பட்டேன். அவர்கள் அதிசயத்துடன் அதையே நீண்ட நேரம்- ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக - உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனராம், அதன் பின்பு, இந்த காட்சியைக் காண அவர்கள் அண்டை வீட்டிலுள்ள போதகரை அழைத்தார்களாம். அவர் தான் இங்குள்ள சகோ. ஸ்ட்ரிக்கர், அவர்கள் உட்கார்ந்து மாலை ஐந்து மணிவரை அதை பார்த்துக்கொண்டிருந் தனர். போதகரை ஜெபம் செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொண்டபோது, அவரால் ஜெபம் செய்யமுடியவில்லை . 6யாரோ ஒருவர் அந்நிய பாஷையில் ஒரு செய்தி அளித்தாராம் (அவர்கள் அதற்கு சொந்த அர்த்தம் உரைத்தார்களாம்). அப்பொழுது மீண்டும் செய்தி அளிக்கப்பட்டு, அவர்கள் சரியான அர்த்தம் உரைக்க வில்லையென்று கூறினதாம். சகோதரி ப்ரூஸ், நான் கூறுவது சரிதானே? அவர்கள் அதற்கு சரியான அர்த்தம் உரைக்கவில்லை. இந்த கூடாரத்திலிருந்து புறப்பட்டு செல்லும் செய்தியை அவர்கள் விசுவாசிப்பதனால், அதற்கு பாராட்டுதலாக அந்த அடையாளம் தோன்றினதென்றும், அவர்கள் இதைக் காட்டிலும் பெரியகாரியங்கள் நிகழ்வதைக் காண்பார்கள் என்றும், தேவதூதர்கள் ஏறுகிறதையும் இறங்குகிறதையும் ஏறுகிறதையும் கூட அவர்கள் காண்பார்களென்றும் அந்த செய்தி கூறினதாம். 7எனவே நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் முடிவு காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். நான் .... இது சிலருக்கு பயங்கரமாக தென்படக்கூடும். ஆனால் கிறிஸ்தவர்களுக்கோ ; நான் இங்கு அடைந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் கடைசி காலத்தில் இருப்பதற்காக நான் மகிழ்கிறேன். இதை ஒருகூட்டத்தில் நான் கூறின்போது, ஒருவர் என்னிடம் வந்து,''நீர் என்ன பேசுகிறீர்? உலகம் முடிவைக் காண உமக்கு மகிழ்ச்சியாயுள்ளதா என்ன?“ என்று கேட்டார். நான், 'ஆம், ஐயா நிச்சயமாக“என்றேன். அவர்,'உலகம் முடிவுறுவதைக் காண விரும்புவது புத்திசாலித்தனமல்ல'' என்றார். நான், 'உலக முடிவின்போது இயேசு வருவார். அவரை தான் நான் காண விரும்புகிறேன். அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும்'' என்று வேதம் கூறியுள்ளது (2 தீமோ. 4:8)'' என்றேன். இந்நாட்களில் ஒன்றில், இவ்வுலகில் உள்ள இந்த பழைய காரியங்கள் ஒழிந்து போய், நாம் அவரைக் காணப்போகிறோம் என்று அறிந்திருப்பது நமக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. 8சில ஆண்டுகளுக்கு முன்பு ... ஓ, அநேக ஆண்டுகளுக்கு முன்பு அடிமைத்தனம் இருந்தது. அப்பொழுது கறுப்பு நிறமுள்ள வயோதிபர் ஒருவர் இருந்தார். அவர்கள் ஆலயங்களில் பாடுவார்கள் - நகர் புறப்பாடல்கள். அவர்கள் அடிமைகளை ஒன்று கூட்டி, கூட்டங்கள் நடத்தி, சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதுண்டு. ஒரு இரவு கூட்டத்தில், கறுப்பு நிறமுள்ள அந்த வயோதிபர் இரட்சிக்கப்பட்டார். அவர் அப்பொழுது விடுதலையடைந்ததை உணர்ந்தார். அடுத்த நாள் காலையில், அவர் வேலை செய்து கொண்டிருந்த தோட்டத்தில், அவர், ''நான் விடுதலையடைந்து விட்டேன்' என்று மற்ற அடிமைகளிடம் கூறினார். அவருடைய முதலாளி வந்து, 'சாம், இங்கே பார். மற்ற அடிமைகளிடம், நீ விடுதலையாகி விட்டதாக கூறினதாக கேள்விப்படுகிறதெல்லாம் என்ன?' என்று அவரைக் கடிந்துகொண்டார். அவர்,''ஆம், முதலாளி. அது உண்மை . சென்ற இரவு நடந்த கூட்டத்தில் நான் பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையானேன் (ரோமர் 8:2) ' என்றார். அதுதான், அதுதான். 9நான் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையானேன். ஒரு காலத்தில் நீங்கள்அதற்கு அடிமைகளா யிருந்தீர்கள். ஆனால் இப்பொழுதோ நீங்கள் அதனின்று விடுதலையாகிவிட்டீர்கள். பாருங்கள்? இன்று காலை நான் கூறினது போன்று, மரணம் பாவத்தில் தான் தங்கியுள்ளது. பாவமும் மரணமும் ஒன்றே. நீங்கள் பாவத்தினின்று விலகும்போது மரணத்தினின்று விலகுகின்றீர்கள். நீங்கள் பாவத்தில் நிலைத்திருந்தால், மரணத்தில் நிலைத்திருக்கின்றீர்கள், பாருங்கள்? எனவே நீங்கள் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாகும் போது, நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் புது சிருஷ்டியாயிருக்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் சுயாதீனராகின்றீர்கள். அவருடைய முதலாளி அவரிடம் ''சாம், நீ கூறுவது உண்மைதானா?'' என்று கேட்டார். அவர், ''ஆம், ஐயா, என் ஜனங்களிடம் பேசி, அவர்களை பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கும்படிக்கு சென்ற இரவு கர்த்தர் என்னை அழைத்தார். நாங்கள் அடிமைகளாயிருந்தாலும், பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று நாங்கள் விடுதலையாயிருப்போம்' என்றார். முதலாளி, ''சாம், நீ கூறுவது உண்மை தானா?''என்றார். அவர், ''முதலாளி, நான் இவ்வாறு கூறினதால், நீர் என்னை என்ன செய்யப் போகின்றீரோ, எனக்குத் தெரியாது. ஆனால் உங்களிடம் இதை கூறுகிறேன். நான் சுயாதீனமுள்ள மனிதன். நான் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையானவன்“ என்றார். முதலாளி, ''சாம், நானும் ஒரு கிறிஸ்தவன் என்று நீ அறிவாய்... தேவன் உன்னை பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கி, நீ கிறிஸ்தவனாகி, அதைக் குறித்து உன் சகோதரர்களுக்கு நீ கூற விரும்புவதால், இன்று காலை உன்னை விடுதலையாக்கி, அதற்கான பிரகடனத்தில் கையொப்பமிடப்போகின்றேன். அப்பொழுது நீ யாருக்கும் அடிமையாயிராமல், சுயாதீனமுள்ளவனாக உன் சகோதரருக்கு சுவிசேஷத்தை பிரசங்கிக்கலாம்“ என்றான். 10அந்த வயோதிபர் அநேக ஆண்டுகளாக பிரசங்கித்து வந்தார். பின்பு ஒரு நாள், நாமெல்லாரும் நமது பாதையின் முடிவை அடைவது போல் அவரும் அடைந்தார். அவர் அநேக மணி நேரம் சுய நினைவற்று கிடந்தார். அவருடைய வெள்ளை சகோதரரில் அநேகர் அவரைக்காண வந்திருந்தனர். அவர் உணர்வடைந்து விழித்தபோது, ஒருகூட்டம் ஜனங்கள் அவரைச் சூழ இருந்தனர். அவர் சுற்று முற்றும் பார்த்து விட்டு,“இன்னுமா முடியவில்லை?'' என்று கேட்டார். அவர்கள், ''சாம், நீர் உறங்கிக்கொண்டிருந்தீர்' என்றனர். அவர், 'இல்லை, நான் உறங்கவில்லை. நான் அக்கரைக்கு சென்றிருந்தேன்'' என்றார். அங்கு குழுமியிருந்த போதகர் சகோதரர்கள், ''சாம், அக்கரையில் என்ன கண்டீர் என்று கூறும்' என்றனர். அவர், ''நான் முத்துக்கள் பதித்த அந்த பெரிய வெள்ளை வாசலுக்குள் நடந்து சென்றேன். அப்பொழுது வெள்ளை சிங்காசனத்தையும் அவரையும் கண்டேன். தேவதூதன் ஒருவன் வந்து, 'நீ தான் சாம் என்பவனா?“ என்றான். நான், “ஆம்” என்றேன். அவன்,''சாம், இங்குள்ள அங்கியையும் கிரீடத்தையும் கண்டாயா? நீ பூமியில் செய்த மகத்தான பணியின் நிமித்தம் இவைகளைப் பரிசுகளாக வென்றுவிட்டாய்'' என்றான். அவர், ''அங்கி, கிரீடம் போன்ற பரிசுகளைக் குறித்து என்னிடம் பேச வேண்டாம்'' என்றார். தேவதூதன், 'அப்படியானால் உனக்கு என்ன பரிசு வேண்டும்?''என்று கேட்டான். அவர், 'அவரை ஆயிரம் ஆண்டுகள் பார்த்துக்கொண்டிருக்க மாத்திரம் அனுமதித்தால் போதும்“ என்றார். 11நாம் அனைவருக்குமே அது போன்ற உணர்வுதான் உள்ளதென்று கருதுகிறேன். உங்களுக்கும் இருக்கிறதல்லவா? எனக்கு அங்கிகளும், கிரீடங்களும், மாளிகைகளும் வேண்டாம். அவரைப் பார்த்துக்கொண்டி ருக்க மாத்திரமே எனக்கு விருப்பம். உங்களுக்கும் அதே விருப்பம் உள்ளதல்லவா? சகோ.நெவில், அப்படி செய்யும்போது, உங்களுடன் கைகோர்த்துக்கொள்ள விரும்புகிறேன். நாம் ஒருமித்து அவரைப் பார்த்துக்கொண்டி ருக்கும் போது, நான், 'சகோ.நெவில், யோசித்து பாருங்கள், நாம் கூடாரத்தில் ஒன்றாக இருந்தோம். அங்கு வெயிலும் குளிருமாய் இருந்தது. இப்பொழுது நாம் யாரைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று கவனியுங்கள், ஜீவனுள்ள தேவனுடைய குமாரனை“ என்பேன். அவருடைய முகச்சாயலைக் காண்பது மிகவும் அற்புதமாயிருக்கும் அல்லவா? 12என் வாழ்க்கையில் இருமுறை - இதுவரை மூன்று முறை - அவரை தரிசனத்தில் கண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அவர் ஒரேவிதமான தோற்றத்தை உடையவராயிருந்தார். அவருடைய உருவத்தைவரைய இவ்வுலகில் எந்த ஓவியனும் இல்லை. அவர்கள் ஒருக்கால் அவரைப்போல் காணப்படும் ஒரு படத்தை வரையலாம். அவர் எனக்கு எப்படி தோற்றமளித்தார் என்றால், அவர் பேசினால் உலகம் முடிவடையும் என்பது போன்ற ஆண்மைத்தனம் கொண்டவராயும், அதே சமயத்தில் இனிமையாகவும் அழகாகவும் காணப்பட்டார். அதற்கு இணையேயில்லை .... ஒரு ஓவியன் தன் துரிகையினால் (brush) தீட்டமுடியாத அளவுக்கு அநேக சிறப்பு அம்சங்கள் அவருக்குள்ளன. அவரை என்றாவது ஒரு நாள் முகமுகமாக நான் நிச்சயம் காண விரும்புகிறேன். 13அவர்தமது விலையேறப்பெற்ற கரங்களையுயர்த்தி, ''என்னிடத்தில் வாருங்கள்'' என்று கூறினதை கேட்க எனக்கு எவ்வளவு விருப்பம் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. அவர் பயணம் செய்து களைத்துப்போய், அந்த களைப்பான தோற்றத்துடன், 'வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்'' (மத்.11:28-29) என்று கூறினதை கற்பனை செய்து பாருங்கள். அப்படி அவர் கூறினதை எனக்கு கேட்க விருப்பம். அந்த நாளில் நான் இருக்கவில்லை. நான் பேதுரு, யாக்கோபு, யோவான் இவர்களுடன் நின்று கொண்டிருக்கவில்லை. ஆனால், 'நல்லது, உத்தமும் உண்மையும்முள்ள ஊழியக்காரனே, உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி'' (மத். 25:21) என்று அவர் கூறுவதை அவர்களுடன் கூட நின்று கொண்டு கேட்பேன் என்று நம்புகிறேன். 14இந்த வேதாகமத்தை எழுதின பவுல், ஏசாயா, எரேமியா, இன்னும் அப்போஸ்தலர்கள் அனைவரும், அந்த விலையேறப் பெற்ற சகோதரர்கள், இப்பொழுது எங்கிருந்தாலும் ...தேவன் அவர்களுடன் ஈடுபாடு கொண்டு, அவர்கள் காரியங்களை முன்கூட்டி காணவும், அதை எழுதிவைக்கவும் செய்து, வேதத்தில் உரைக்கப்பட்டுள்ள வரங்களாகிய தீர்க்கதரிசனம் உரைத்தல், அந்நியபாஷை பேசுதல், அற்புதங்களும் அடையாளங்களும் செய்தல் போன்றவைகளை அவர்களுக்கு அருளினார். அந்த மனிதர்கள், இப்பொழுது எங்கிருந்தாலும்; அவர்களுடன் கூட நாமும் இருக்கப்போகின்றோம். அதே தேவன் அதே காரியங்களை இப்பொழுது செய்து வருகிறார், ''நான் ஊகிக்கிறேன்“ என்று இனி அல்ல, அதை நாம் திட்டவட்டமாக அறிந்துள்ளோம். அவர் இருக்கிறார் என்று நாம் உறுதியாக அறிந்துள்ளோம். எனவே நாம் உலகிலுள்ள அனைவரிலும் மிக்க மகிழ்ச்சியுற்ற ஜனங்களாக இருக்க வேண்டும். அல்லவா? இதைக் காட்டிலும் நமக்குவேறென்ன ஆவல்? 15அதிக வயதான ஒரு மனிதருடன் இன்று பிற்பகல் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்கு எண்பத்தெட்டு அல்லது எண்பத்தொன்பது வயதென்று அவர் கூறினாரென்று நினைக் கிறேன். அண்மையில் அவர் கிறிஸ்தவரானார். அவர் ஞாயிறு சூட்டில் இருந்தபோது, அவருக்கு நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன். அவரை நான் தண்ணீரில் கொண்டு சென்றேன். அவர் மாற்றிக்கொள்ள, சகோ. உட் அவருக்கு கால் சட்டை ஒன்றை கொடுத்தாரென்று நினைக்கிறேன். அவருக்கு இந்த தண்ணீரில் நாங்கள் ஞானஸ்நானம் கொடுத்தோம். அவர் சிறுவனாயிருந்தபோது..... அவர் இப்பொழுது ஒரு பணக்காரர். ஆனால் அவர் சிறுவனாயிருந்தபோது, மாதம் முப்பது டாலர் ஊதியத்திற்கு அவர் வேலை செய்ததாக என்னிடம் கூறினார். அவர் வயோதிபராகும் வரைக்கும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு வயதாகும் போது, பிச்சையெடுத்து தெருக்களில் படுத்திருக்கக்கூடாது என்னும் நோக்கம்கொண்டு, சிறு காசுகளை சேமித்து முதலீடு செய்தார். அவை பலன் தந்து பெருகின. இப்பொழுது அவருக்கு எண்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது. அவருக்கு எண்பத்தொன்பது வயதென்று கூறினாரென்று நினைக்கிறேன். அவருக்கு தொண்ணூறு வயது நெருங்குகிறது. அவர் இப்பொழுதும் நன்றாக நடந்து, இன்று காலை சபையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் கவலைப்பட அவசியமில்லாத அளவுக்கு அவருக்கு பணம் உண்டு. அவர் இன்னும் நூறு ஆண்டுகள் வாழ நேர்ந்தாலும், பணத்தைப் பொறுத்த வரையில் அவர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த சகோதரன் நல்மனம் கொண்டஒரு நல்ல பரிசுத்தவான். அவருக்குத் தெரிந்த மட்டில் அவர் கிறிஸ்தவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வருகிறார். நான் அவரிடம், “என் விலையேறப் பெற்ற சகோதரனே, எல்லாவற்றிற்கும் மேலாக, உமது எண்பத்தேழாம் அல்லது எண்பத்தெட்டாம் வயதில் தேவன் கிருபையாக கீழே வந்து, நீர் பரலோக வீட்டை அடைய உமக்கு நித்திய ஜீவனை அளித்துள்ளார். உமது வாழ்க்கையை பூரணப்படுத்த, அதைக் காட்டிலும் உமக்கு வேறென்ன வேண்டும்?' என்றேன். ஆம், ஐயா, 16நாம் எவ்வளவு ஐசுவரியத்தை இவ்வுலகில் சேமித்து வைத்திருந்தாலும், நாம் எவ்வளவு பெரிய காரியங்களை இவ்வுலகில் செய்தாலும் - மனிதன் என்ன தான் செய்தாலும் -நாம் மரித்து, இவைகளை விட்டு விட்டு செல்ல வேண்டியவர்களாயி ருக்கிறோம். மிகவும் வேகமாய் அழிந்து போகும் வீணான இவ்வுலகின் ஐசுவரியங்களை இச்சியாதேயுங்கள் நித்தியமான காரியங்களின் மேல் உங்கள் நம்பிக்கைகளை கட்டுங்கள் அவைஒருக்காலும் ஒழிந்து போவதில்லை. அது உண்மை . தேவனின் மாறாத கையைப் பிடித்துக் கொள்ளுங்கள். அந்த பாடல் எனக்கு அதிக விருப்பம். இந்த கூடாரத்தில் நாம் அநேக முறை இப்பாடலைப் பாடியதுண்டு. காலம் வேகம் கடந்து செல்கின்றது, இவ்வுலகில் அசைக்க முடியாத எதுவுமே நிற்க முடியாது நித்தியமான காரியங்களின் மேல் உங்கள் நம்பிக்கைகளை கட்டுங்கள் தேவனின் மாறாத கையைப் பிடித்துக் கொள்ளுங்கள். 17வயது சென்ற என் தாய் அங்கு படுத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னிடம் கோடி டாலர்கள் இருந்தால், அவர்களிடம் ஒரு மணிநேரம் பேசுவதற்கென்று, நான் ஒவ்வொரு சென்டையும் அவர்களுக்கு கொடுத்து விடுவேன். நிச்சயமாக அப்படி செய்வேன். ஆனால் அவர்களிடம் இப்பொழுது பத்து கோடி டாலர்கள் இருப்பதால் என்ன பயன்? ஒன்றுமில்லை. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக அறிந்துள்ளதையே அவர்கள் விட்டு செல்கின்றனர். அதுவே முக்கியம் வாய்ந்தது. 18இவை எல்லாவற்றையும், இன்றிரவு நாம் கணக்கெடுத்து பார்ப்போமாக, நாம் ஜெபிப்பதற்கு முன்பு ''இன்றிரவு நான் தேவனுடன் எந்நிலையில் இருக்கிறேன்' என்று சிந்தித்துபார்ப்போம். நம்முடைய இருதயங்களை நாம் ஆராய்ந்து பார்த்து, கண்டுபிடிப்போம். ''கர்த்தாவே, எந்த ஆத்துமாவையாவது இன்று நான் புண்படுத்தியிருந்தால், யாராகிலும் ஒருவர் விலகிச் செல்ல நான் காரணமாயிருந்தால், நான் ஏதாகிலும் தவறுசெய்திருந்தால், ஓ தேவனே, என்னை மன்னித்தருளும் என்று கூறுவோம். பாருங்கள்? என் விசுவாசம் உம்மை மேலே நோக்குகிறது கல்வாரியின் ஆட்டுக்குட்டியே தெய்வீக இரட்சகரே இப்பொழுது நான் ஜெபிக்கும் போது கேளும் என் குற்றங்களையெல்லாம் போக்கிவிடும் இன்றுமுதல் நான் முற்றிலும் உம்முடையவனாயிருக்கட்டும் வாழ்க்கையில் இருள் கொண்ட சிக்கலான பாதையில் நான் நடந்து கவலைகள் என்னைச் சூழும்போது நீரே என் வழிகாட்டியாயிரும் இருள் வெளிச்சமாக மாற கட்டளையிடும் கவலைகளையும் பயத்தையும் நீக்கிவிடும் நான் என்றும் உம்மை விட்டு வழிதவறாதபடி செய்யும் 19ஆண்டவரே, உமது பாதையில் என்னை வைத்துக்கொள்ளும். உமது சித்தத்தின் மையத்தில் என்னை வைத்துக்கொள்ளும். நீங்கள் வாலிபரானாலும், வயோதிபரானாலும்; உங்களுக்கு வயது என்னவென்று எங்களுக்குத் தெரியாது. உங்களுக்கு ஒருக்கால் எண்பது வயதாகியிருக்கலாம். நீங்கள் நாளை காலை வரை வாழ்ந்தால், பதினாறு வயது பையனும் பெண்ணும் மரித்திருக்க, நீங்கள் உயிரோடிருப்பீர்கள். நாளை காலை விடியும் முன்பு, பதினாறு வயதுடைய அநேக பையன்களும் பெண்களும் தேவனைச் சந்திக்க ஒருக்கால் சென்றிருப்பார்கள். அது உண்மை . எனவே வயதுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. முக்கியமான காரியம் என்னவெனில், நீங்கள் தேவனை சந்திக்க ஆயத்தமா? அதுதான் முக்கியம் வாய்ந்தது. நாம் தலைவணங்கி ஜெபிக்கப்போகும் இந்நேரத்தில் இந்த காரியங்களை சிந்திப்போம். 20ஓ, கிருபையும் பரிசுத்தமும், ஜீவனுக்கெல்லாம் பிதாவும், பயப்படத்தக்கவருமானவரே, இன்றிரவு இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் சிலாக்கியத்தை அளித்ததற்காக எங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துவதற்கென, நாங்கள் சர்வவல்லமையுள்ள தேவனாகிய உம்முடைய சமுகத்தில் வந்திருக்கிறோம். சற்று முன்பு அந்த ஆஸ்பத்திரியில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தபோது, மயக்க முற்றவர்களையும், இரத்தக் கசிவுகொண்டவர்களையும், மூளை கோளாறு ஏற்பட்டவர்களையும், கட்டிலில் கட்டிப் போடப்பட்டவர்களையும் நான் கண்டேன். ஓ, தேவனே, அவர்கள் ஒவ்வொரு வரும் ஆயத்தமாயிருக்கட்டும் என்று ஜெபிக்கிறேன். பிதாவே, இவ்வுலகைவிட்டு அவர்கள் செல்ல நேர்ந்தால், உம்மை சந்திக்க அவர்கள் ஆயத்தமாயிருப்பார்களாக, ஆண்டவரே, உம்முடைய கிருபை இராவிடில், இங்குள்ள நாங்கள் ஒவ்வொருவரும் அவர்களாக இருந்திருக்கக்கூடும் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, நாங்கள் ஆயத்தப்பட வேண்டுமென்பதற்காகவே நாங்கள் உயிரோடிருக்கும்படி செய்து, இன்றிரவு எங்களை ஒன்றுகூடச் செய்திருக்கிறீர் என்பதை உணருகிறோம். கர்த்தாவே, இந்த சிந்தனைகள் இப்பொழுது எங்கள் மனதில் எழுகின்றன. எங்கள் இருதயத்தின் கடிவாளத்தை நீர் தேடிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், எங்களில் அசுத்தமான காரியங்கள் ஏதாகிலும் காணப்பட்டால், பிதாவே, அதை எடுத்துப்போடுவீராக. தேவனே, எங்கள் ஆத்துமாக்களை உமக்கென்று பிரதிஷ்டை செய்து கொள்ளும். நீர் எங்களுக்குச் செய்த எல்லாவற்றிற் காகவும், நீர் எங்களுக்குச் செய்யப்போவதாக நாங்கள் விசுவாசிக்கும் எல்லாவற்றிற் காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆண்டவரே, சகோதரி ப்ரூஸின் வீட்டில் இன்று பிரத்தியட்சமான அந்த ஒளிக்காவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். அது அவர்களுக்கு பெலத்தையளிக்கும். 21இப்பொழுது, ஆண்டவரே, இங்கு இந்த கூடாரத்தில் உள்ள உமது சமுகத்தினால் எங்கள் ஆத்துமாக்கள் தொடர்ந்து புத்துணர்ச்சி பெற இன்றிரவு அருள வேண்டுமாய் ஜெபிக்கிறேன். பிதாவே, இந்த கூடாரத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இதன் போதகரான சகோ.நெவிலுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவர் தாழ்மையுள்ளவர், நேர்மையானவர், கிறிஸ்துவுக்காகவும் அவருடைய சபைக்காகவும் தேவனுடைய அன்பினால் நிறைந்தவர். அவரையும், அவருடைய அருமையான துணைவியாரையும், அவருடைய பிள்ளைகளையும், ஆசீர்வதிக்கும்படி ஜெபிக்கிறோம். ஆண்டவரே, அவர்கள் நீண்ட காலம் எங்கள் மத்தியில் உயிர் வாழட்டும், அதை அருள்வீராக, அவர்களுடைய வாசலிலிருந்து வியாதியை அப்புறப்படுத்தி, அவர்களை ஆரோக்கியத்துடன் வைப்பீராக. எங்கள் அனைவருடைய வாசல்களிலிருந்தும் வியாதியை விலக்கி, உம்மை நாங்கள் சேவிக்க, எங்களை சுகத்துடன் வைப்பீராக. 22இப்பொழுது ஆராய்ந்து பார்ப்பதற்காக எங்கள் ஆத்துமாக்களை பலிபீடத்தின் மேல் வைக்கிறோம். இன்னும் சில நொடிகளில் என் கண்களைத் திறந்து உமது வார்த்தையைப் படிக்கப்போகிறேன். உமக்கு சித்தமானால், அது என் மேல் விழுந்த கடமையாயிருந்தால், இன்றிரவு ஜீவ அப்பத்தைப் பிட்டு ஜனங்களுக்கு அளிப்பேனாக. ஆண்டவரே, இங்குள்ள எளிய, களைத்துப்போயிருக்கிற ஏதாவது ஒரு ஆத்துமாவுக்கு உதவியாயிருக்க ஏதாவதொன்றைக் கூற எனக்குதவி புரியும். அதுதிருத்தும் வார்த்தைகளாகவும் அமைந்து, பரலோகம் எங்கள் வீடாக அமைய வேண்டுமென்று நாங்கள் எதிர்பார்த்தால், நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றும், என்ன செய்ய வேண்டுமென்றும், தற்போதைய உலகில் நாங்கள் எப்படி வாழ வேண்டுமென்றும் அறிந்து கொள்ள உதவி செய்யும். ஆண்டவரே, இதை அருள்வீராக, வியாதியை சுகப்படுத்தும். கர்த்தாவே, வியாதியாயுள்ளவர் யாராகிலும் எங்கள் மத்தியில் இருந்தால், அவர்களை சுகப்படுத்த வேண்டுமென்று ஜெபிக்கிறோம். களைப்புற்றவர்களை பெலப்படுத்தும். அவர்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த சபைக்காக மாத்திரமல்ல, ஜெபங்களையும் விண்ணப்பங்களையும் தேவனுக்கு முன்பாக ஏறெடுக்கும் உலகம் முழுவதிலுமுள்ள மற்ற சபைகளுக்காகவும், ''கர்த்தராகிய இயேசுவே, வாரும்'' என்று கூக்குரலிடும் பசியுள்ள இருதயம் கொண்ட பல்லாயிரக்கணக்கான பரிசுத்தவான்களுக் காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். ஓ, நிச்சயமாக அவர்களுடைய கூக்குரலுக்கு என்றாவது ஒரு நாள் நீர் செவிகொடுத்து, புறபட்டு வருவீர். அது நிகழ்வதற்கு முன்பு - உமது வருகைக்கு முன்பு - நித்திரையடைய வேண்டுமென்றி ருந்தால், எக்காளம் தொனிக்கும்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள் என்று நாங்கள் அறிவோம். நாங்கள் புறப்பட்டு வந்து, ஒரு நாளில் உமது சமுகத்துக்கு முன்பாக நிற்போம். இதற்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். அந்த நேரத்துக்காக நாங்கள் காத்திருந்து, இப்பொழுது எங்கள் இருதயங்களை அதற்கென்று ஆயுத்தப்படுத்துகிறோம். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 23இன்றிரவு நான் நீண்ட நேரம் பேச நினைக்கவில்லை. முப்பது அல்லது நாற்பது நிமிடங்களுக்கு, ஒரு சிறு பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். சங்கீதம் 105,15ம் வசனம் முடிய வாசிக்கலாம். இந்த சங்கீதத்தை நான் வாசிக்கும் போது, தேவனுடைய வார்த்தை வாசிக்கப்படுவதை நீங்கள் கூர்ந்து கவனிக்கவேண்டுமென்று விரும்புகிறேன். ஏனெனில் தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தவறாது. கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக் குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். அதை சற்று சிந்தித்துப் பாருங்கள்! கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக் குள்ளே பிரசித்தப்படுத்துங்கள் அவரைப்பாடி, அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களை யெல்லாம் தியானித்துப் பேசுங்கள். அவருடைய பரிசுத்தநாமத்தைக் குறித்து மேன்மை பாராட்டுங்கள்; கர்த்தரைத்தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. கர்த்தரையும் அவருடைய வல்லமையையும் நாடுங்கள்;அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள். அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட வர்களாகிய யாக்கோபின் புத்திரரே! அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும் அவர் வாக்கின் நியாயந்தீர்ப்புகளையும் நினைவு கூருங்கள். அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும் ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும், அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார். அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார். அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சொற்ப ஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள், அவர்கள் ஒரு ஜனத்தைவிட்டு மறுஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தை விட்டுமறு தேசத்தாரண்டைக்கும். போனார்கள். அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்துகொண்டு: நான் அபிஷேகம் பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார். சங்.105: 1- 15. 24இதிலிருந்து மரியாதை என்னும் பொருளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தாவீது கர்த்தரைத் துதிப்பதை நாம் படித்தோம். நாம் தேவனுக்கு மரியாதை செலுத்த கடமைபட்டிருக்கிறோம். இந்த ஒரு காரியத்தை, இன்றிரவு இங்குள்ள ஒவ்வொருவருடைய இருதயத்திலும் பதிக்க விரும்புகிறேன். அதாவது, நாம் காண்கிற எல்லா காரியங்களுக்கும் நாம் மரியாதை செலுத்த வேண்டும். பாருங்கள், அதை நாம் மதிக்க வேண்டும். இஸ்ரவேலில் சொற்பபேர் இருந்தபோது ஒருக்கால் தாவீது ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இவர்களைக் குறித்து பேசியிருப்பான் - தேவன் அவர்கள் நிமித்தம் தேசங்களையும் ராஜாக்களையும் கடிந்து கொண்டதாக தாவீது கூறுகிறான். தேவன் தேசங்களையும் ராஜாக்களையும் கடிந்துகொண்டு, 'நான் அபிஷேகம் பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள்'' என்றார். 25பிரசங்கி புத்தகத்தில், 12ம் அதிகாரம் 13ம் வசனத்தில், இவ்வாறு கூறப்பட்டுள்ளது: காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக. தேவனுக்கு பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே. முழு காரியத்தின் கடைத்தொகை தேவனுக்கு பயந்திரு'' என்பதே. உங்களுக்கு பயமில்லாமல் மரியாதை இருக்க முடியாது. உங்களுக்கு தேவன் மேல் பயமிருக்க வேண்டும். சாலொமோனும் கூட நீதிமொழிகளில், கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.'' என்று கூறியுள்ளான் (நீதி. 9:10). அவரைக்கண்டு பயப்படுகிறீர்கள் என்று அர்த்தமல்ல. அவருக்கு மரியாதையும் பயபக்தியும் அளிக்கிறீர்கள் என்பதே அதன் அர்த்தம். நீங்கள் தேவனுக்கு மரியாதை செலுத்தும்போது, அவருக்கு பயப்படுகிறீர்கள். அவருக்கு எந்த வகையிலாவது அதிருப்தி உண்டாக்கி விடுவீர்களோ என்று நீங்கள் பயப்படும் கின்றீர்கள். நீங்கள் அப்படி செய்ய விரும்புவதில்லை. 26நான் என் தாய்க்கு பயப்படுகிறேன், என் மனைவிக்கு பயப்படுகிறேன், என் சபைக்கு பயப்படுகிறேன். நான் தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு பயப்படுகிறேன் - அவர்களுடைய வழியில் எங்காவது இடறலை போட்டு விடுவேனோ என்று, நான் ஜனங்களுக்கு பயப்படுகிறேன். நான் ஏதாகிலும் தவறு செய்து,அதன் காரணமாக நான் கிறிஸ்தவன் அல்ல என்று நினைத்து விடுவார்களோ என்று நான் நகரத்திலுள்ள ஜனங்களுக்கு பயப்படுகிறேன். பாருங்கள், உங்களுக்கு மரியாதை இருக்கும் முன்பே பயம் இருக்கவேண்டும். தேவன்அதை அதிகாரத்துடன் கேட்கிறார் (demand). அவர் மரியாதையை அதிகாரத்துடன்கேட்கிறார். அவர் அப்படி செய்கிறார். அவர் அதிகாரத்துடன் கேட்கிறார். பயம் மரியாதையை அளிக்கிறது என்று நாமறிவோம். 27ஒரு மனிதனை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அவன் ஒரு விவசாயி அல்லது கடையில் வேலை செய்பவன். யாருமே அவன் மேல் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் அவனுக்கு காவற்படையில் வேலை கிடைத்து, அவன் ஒரு போலீஸ்காரனாக தன் சீருடையையும், உத்தியோக சின்னத்தையும் (badge) அணிந்து தெருவில் வந்தால், அதற்கு முந்தின நாள் வரைக்கும் அவனுடன் பேசாதவரும் கூட, “ஹல்லோ , ஜான் எப்படியிருக்கிறீர்கள்?'' என்று கேட்பார்கள். பாருங்கள்? ஏன்? அது ஒரு விதமான ஆச்சரியம் (awe), பயம், மரியாதை, அவன் ஒருக்கால் நகராண்மைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புண்டு. 28ஜனாதிபதி கென்னடி ஜனாதிபதி பதவியை வகிக்காவிட்டால், இன்றிரவு அவர் என்னவாயிருப்பார்? அவர் முன்னைப் போன்று இப்பொழுதும் ஒரு சாதாரண மனிதனாக இருந்திருந்தால் என்னவாயிருக்கும்? அவர் இங்குள்ள கோல்கேட் நிறுவனத்தில் வாரம் ஒன்றுக்கு நாற்பது டாலர் ஊதியத்திற்கு வேலை செய்திருந்த தொழிலாளி அல்லவா? அந்நிலையில் அவர் நகரத்துக்கு வந்திருந்தால், யாருமே அவர் பேரில் கவனம் செலுத்தியிருக்கமாட்டார்கள் அவருடைய சகாக்களைத் தவிர. ஆனால் அவர் அமெரிக்கஐக்கிய நாடுகளின் ஜனாதிபதி என்பதால், அவருக்கு மரியாதை உகந்ததே , பாருங்கள். 29அதுபோன்று, தேவன் தேவனாயிருப்பதால், அவருக்கு மரியாதை உகந்ததாகும். அது உண்மை . அவருக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். அவருக்கு நாம் பயப்பட வேண்டும், அது மரியாதையை கொண்டு வரும். தேவன் தமக்கும் தமது ஊழியக்காரர்களுக்கும் மரியாதையை அதிகாரத்துடன் கேட்கிறார். தேவன் தமது ஊழியக்காரர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென்று வற்புறுத்தி கேட்கிறார். அவருடைய ஊழியக்காரர்களை நாம் எவ்வாறு அறிந்து கொள்வோம்? அவர் தமது ஊழியக்காரர்களை தமது வார்த்தையினால் உறுதிப்படுத்துகிறார். அவர் இவர்களைத் தெரிந்துகொண்டு, தேவனுடைய ஊழியக்காரர்களாக்கி, அவருடைய வார்த்தை இவர்கள் மூலம் கிரியை செய்யும்படியாக செய்து, அவர்கள் தமது ஊழியக்காரர்கள் என்பதை நிரூபிக்கிறார். அந்த ஊழியக்காரர்களுக்கு நீங்கள் மரியாதை செலுத்தும் போது, நீங்கள் தேவனுக்கு மரியாதை செலுத்துகின்றீர்கள். எனவே நான் உங்களுக்கும் நீங்கள் எனக்கும் மரியாதை செலுத்தி, நாம் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்து வோமானால், நாம் தேவனுக்கு மரியாதை செலுத்துகிறவர்களாயிருப்போம். 30'மிகவும் சிறியவராகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்' என்று இயேசு கூறவில்லையா? (மத். 25:40). இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும். அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்றார். அவர் (மத். 18:6, 10) அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள் என்று நமக்குத் தெரியும். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருப்பதால், நாம் தேவனில் ஒருபாகமாயிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். தேவன் இந்த மரியாதையை நம்மிடம் அதிகாரத்துடன் கேட்கிறார். தேவன் தமது பிள்ளைகள் யாரென்பதை காண்பிக்கிறார். அவர் அற்புதங்களையும் அடையாளங்களையும் அவர்கள் மூலம் நடப்பித்து, அவர்களை அடையாளம் காண்பிக்கிறார். 31நாம் இப்பொழுது ஆரம்பித்து, வேதத்தில் காணப்படும் சில மனிதர்களைப் பார்ப்போம். முதலாவதாக, நான் நினைக்கிறேன் ..... நாம் சிறிது நேரம் நோவாவை எடுத்துக் கொள்வோம். நோவா தேவனிடமிருந்து வெளிப்பாட்டைப் பெற்றான். ஆனால், விஞ்ஞானம் உண்மையென்று நிரூபித்தவைகளுக்கு அது முரணாயிருந்தது. அவன் தேவனுடன் பேசினான், தேவனும் அவனுடன் பேசினார். அவன் பேழையை செய்யத் தொடங்கினான். அப்பொழுது பரியாசக்காரர் கடைசி நாட்களில் பரியாசக்காரர் எழும்புவார்கள் என்று வேதம் கூறியுள்ளதே, அது போன்ற பரியாசக்காரர் அந்நாட்களிலும் இருந்தனர். இந்த பரியாசக்காரர் நோவாவை பரியாசம் செய்தனர். அவன் பேழை செய்வதைக் கண்டு, அவனுக்கு மூளைகோளாறு ஏற்பட்டுவிட்டதென்று எண்ணினர். ஆனால் தேவனோ அந்த பரியாசக்காரர்மேல் நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்தார். ஏனெனில் அவர்கள் தேவனுடைய செய்தியாளனின் பிரசங்கத்துக்கு செவிகொடுக்காமல், பேழைக்குள் செல்லமறுத்தனர். அப்பொழுது தேவன் தமது தெய்வீக நியாயத்தீர்ப்பை பூமியின் மேல் அனுப்பினார். முதலாவதாக, அதை ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள எண்ணங் கொண்டிருந்த அனைவருக்கும் அவர் ஒருவழியை உண்டு பண்ணினார். அவர்கள் அதிலிருந்து தப்ப வில்லையென்றால், அவர்களுக்கு ஒன்று மாத்திரமே உள்ளது. தப்பித்துக் கொள்வதற்கு தேவன் ஆயத்தம்பண்ணின வழியை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போனால், ஒன்று மாத்திரமே உள்ளது. அது தான் தேவனுடைய நியாயத்தீர்ப்பு. 32நீங்கள் இரண்டு காரியங்களை மாத்திரமே செய்ய முடியும் இரக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது நியாயத்தீர்ப்புக்குள் பிரவேசிக்க வேண்டும். இவ்விரண்டில் ஒன்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றிரவு அந்நிலையில் தான் நாமிருக்கிறோம் நாம் தேவனுடைய இரக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல் அவருடைய நியாயத்தீர்ப்பில் நிற்கவேண்டும். அதிலிருந்து தப்பித்துக் கொள்ள விருப்பங்கொள்பவர்களுக்கு, தேவன் எப்பொழுதுமே அதற்காக ஒரு வழியை உண்டுபண்ணுகிறார். பின்பு அவர் ... மீதியுள்ளவர் நியாயத்தீர்ப்பில் நிற்கவேண்டும். தேவன் அவ்வாறு விரும்புவதனால் அல்ல, அவர்களாகவே அந்த வழியை தெரிந்து கொண்டதனால். பாருங்கள், தாங்களாகவே அந்த வழியை தெரிந்துகொள்கின்றனர். நண்பர்களே, இன்றிரவு நாம் அந்நிலையில் தான் இருக்கிறோம் - அதேதான். தப்பித்துக் கொள்ள தேவன் வகுத்த வழியை நாம் தெரிந்து கொள்ளலாம், அல்லது அவருடைய நியாயத்தீர்ப்பில் நாம் நிற்கலாம் இவ்விரண்டில்எதை வேண்டுமானாலும் நாம் செய்யலாம். தப்பித்து கொள்ளும் வழியை நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ள தற்காக, இன்றிரவு மகிழ்ச்சியாயிருக்கிறீர்கள் அல்லவா? ஏனெனில் அந்த வழியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறவர் அனைவருமே நியாயத்தீர்ப்பின் கீழ் வரவேண்டும். 33மேலும் வேறொரு மனிதனைக் குறித்து பேச விரும்புகிறேன். மோசே என்னும் பெயர் கொண்ட மகத்தான தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான். இஸ்ரவேல் ஜனங்கள் வேதத்தை ஆராய்ந்துபார்த்து, தேவன் தங்களை விடுவித்து எகிப்திலிருந்து வெளியே கொண்டு செல்வார் என்பதை அறிந்திருந்திருக்க வேண்டும். ஆனால் தேவன் தமது மனிதனைஆயத்தப்படுத்தி அவனை எகிப்துக்கு அனுப்பின்போது, அவர்கள் அவனுக்கு மரியாதை செலுத்தாமல், அவனைப் புறக்கணித்து, 'நீ எகிப்தியனைக் கொன்று போட்டது போல் எங்களையும் கொன்று போட நினைக்கிறாயோ?' என்றனர். அதன் விளைவாக அவர்கள் இன்னும் நாற்பது ஆண்டுகள் அடிமைத்தனத்தில் இருக்க வேண்டியதாயிற்று. அவர்கள் தங்களைவிடுவிக்க வந்தவனுக்கு மரியாதை செலுத்த மறுத்த காரணத்தால், அவர்கள் மேலும் அடிமைத் தனத்தில் இருந்தனர், அது அவர்களை மறுபடியும் அடிமைத் தனத்துக்கு கொண்டு சென்றது. அவர்கள் அடிமைத்தனத்தில் இருக்க வேண்டுமென்று தேவன் விரும்பினதால் அல்ல (அது ஏற்ற நேரமாக இருந்தது. ஆனால் தப்பித்துக்கொள்ள தேவன் உண்டாக்கின வழியை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அவர்கள் நாற்பது ஆண்டுகள் கூடுதலாக அடிமைத்தனத்தில் இருந்தனர். இன்றிரவும் காரியம் அதுவே என்று நான் நம்புகிறேன். அதே காரியம், பாருங்கள். 34அவர்கள் அந்த வழியை ஏற்க மறுத்தனர். ஆனால் தேவனோ தீர்மானம் செய்து, அவர் ஒரு காரியத்தைச் செய்யப்போவதாக தமது உடன்படிக்கையில் ஆபிரகாமிடமும் மற்றவர்களிடமும் வாக்களித்தார். (அதைக் குறித்து தாவீது பாடினதை இன்றிரவு நாம் வாசித்தோம்.) எனவே தேவன் தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றி அவர்களை வெளியே கொண்டுவர தீர்மானித்தார். ஆனால் அதற்குள் ஒரு சந்ததியினர் மரித்து விட்டனர். மோசேயைபரிகாசம் செய்து செய்தியை ஏற்றுக்கொள்ள மறுத்த அந்த பழைய சந்ததியினர் (நாற்பது ஆண்டுகள்) மரித்துப்போயினர். மோசே அடுத்த சந்ததிக்குள் பிரவேசித்தான். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் போனால், அந்த சந்ததி மரித்துபோக தேவன் அனுமதித்து, அதை நிறைவேற்ற அவர் வேறொரு சந்ததியைக் கொண்டு வருவார். அவர்கள் அதை மறுத்தனர். நாம் பார்க்கிறோம், அதன் பின்பு தோன்றின அடுத்த சந்ததியிடம் மோசே சென்று தன்னை உறுதிப்படுத்தின போது ... 35உங்களுக்குத் தெரியுமா, மோசே மறுபடியும் அங்கு செல்ல பயந்தான். அப்பொழுது மோசேக்கு அறுபது வயது, அவன் நாற்பது வருடங்களைக் கழித்தான், அவன் எரியும் முட்செடியில் தேவனிடம் பேசின போது, அவன், ''என்னை அனுப்பினது யார் என்று நான் அவர்களிடம் சொல்வது? என்று கேட்டான், தேவனுக்கு ஒரு நாமம் இருக்கவில்லை, அவன். 'என்னை அனுப்பினது யார் என்று நான் அவர்களிடம் சொல்ல வேண்டும்? 'உங்கள் பிதாக்களின் தேவன் எனக்கு தரிசனமானார்' என்று நான் அவர்களிடம் சொன்னால், 'எங்கள் பிதாக்களின் தேவன் யார்? என்று கேட்பார்களே'' என்றான். அவர், 'இருக்கிறவராகவே இருக்கிறேன்' என்று அவர்களிடம் சொல்'' என்றார். அவர் 'மோசே, உன்கையிலிருக்கிறது என்ன?“ என்றார். அவன், ஒரு கோல் என்றான். அவன் அதை தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று. அவன் தன் கையைத் தன் மடியிலே போட்ட போது, அது வெண்குஷ்டம் பிடித்தது. அதை மறுபடியும் போட்ட போது, அது சுகமடைந்தது (யாத்.4:37). அவர், இந்த அடையாளங்களுடன் அங்கு போய் ஜனங்களுக்கு முன்பாக அதை செய்து காண்பி. அது உன்னை உறுதிப்படுத்தும் அடையாளங்களாக இருக்கும். அவர்களை விடுவிக்க உன்னை நான் அனுப்பினேன் என்று இந்த அடையாளங்களின் மூலம் அவர்கள் அறிந்துகொள்வார்கள் என்றார். ஓ, சகோதரனே தேவன் எப்பொழுதுமே அப்படிசெய்கிறார். தேவன் எப்பொழுதுமே இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்களை அளிக்கிறார். பாருங்கள்? 36அவன் ஜனங்களை அழைத்து, அவர்களுக்கு முன்னால் அவனுடைய அடையாளங்களைச் செய்து காண்பித்த போது, இஸ்ரவேலர் அனைவரும் விசுவாசித்தனர் - அவர்கள் ஒவ்வொருவரும். அவர்கள் மீட்பைக்கோரி நேராக பார்வோனின் அரண்மனைக்குச் சென்றனர். ஆனால் பார்வோனோ அவர்களை விடுவிக்கப் போவதில்லை யென்று தீர்மானம் செய்தான். தேவன் பார்வோனின் மேல் நியாயத்தீர்ப்பை அவிழ்த்துவிட்டார். எகிப்தில் என்ன நடந்ததென்று நமக்குத் தெரியும். இது வினோதமாயுள்ளது. அவர்கள் எல்லா அடையாளங்களைக் கண்ட பின்பு சிவந்த சமுத்திரத்தை அடைந்தனர். இந்த அடையாளங்களை நடப்பித்த அதே தேவனை அவர்கள் சிவந்த சமுத்திரத் தண்டையில் சந்தேகித்தனர் அவர் முதலில் தப்பித்துக்கொள்ள ஒரு வழியை உண்டாக்கின பின்பும். 37அங்கு தான் நாம் தவறு செய்கிறோம். ஒரு சிறுவியாதி நம்மை தாக்கும்போது; ஒரு சிறு ஆபத்து அல்லது ஒரு சிறு துன்பம் நமக்கு வழியில் எங்காவது நேரிடும்போது, நாம் விழுந்து போகும் நிலையையடைகின் றோம். இரட்சிக்கப்பட்டு சிறிது காலம் மாத்திரம் கழித்த ஒருவனைப் பார்த்து யாராகிலும் கேலி செய்து, 'நீ உருளும் பரிசுத்தனேயன்றி வேறு யாருமல்ல'' என்பாரானால். ''நான் உருளும் பரிசுத்தன் என்று அழைக்கப்படுவது எனக்குப் பிடிக்கவில்லை. ''பார்த்தீர்களா? பாருங்கள், அங்குதான் உங்களுக்கு சந்தேகம் உண்டாகின்றது. அதுவே நீங்கள் உறுதியாய் நிற்கவேண்டிய நேரம் அதுவே நீங்கள் செய்தியாளனுக்கு மரியாதை செலுத்த வேண்டிய நேரம். அதுவே நீங்கள் தேவனுக்கு மகிமை செலுத்தவேண்டிய நேரம். 38மோசே அவர்களிடம், ''நான் ஏற்கனவே பத்து அற்புதங்களை உங்கள் முன்னிலையில் செய்தேன். தேவன் உங்களுக்கு பத்து அற்புதங்களை அருளினார். அதன் பிறகும் நீங்கள் சிவந்த சமுத்திரத் தண்டையில் பயப்படுகின்றீர்கள். நிச்சயமாக உங்களை விசுவாசிக்கும்படி செய்ய உங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்?'' என்றான். அவன் நடந்து சென்று, தன் கோலை எடுத்து சமுத்திரத்தின் மேல் நீட்டினான். அப்பொழுது புயல் அடித்து, சமுத்திரத்தை மறுபுறம் தள்ளினது. அவர்கள் கடந்து சென்றனர். அவர்கள் கடந்து சென்றவுடனே, அவர்களுக்கு அப்பம் இல்லை என்று முறுமுறுத்தனர். பாருங்கள், அதே காரியம். அப்பொழுது கர்த்தர் அவர்களுக்கு வானத்திலிருந்து மன்னாவைப்பொழிந்தார். பின்பு அவர்களுக்கு தண்ணீர் இல்லை யென்று அவர்கள் முறுமுறுத்தனர். ஒரு முறுமுறுத்தலுக்குப் பின்பு மற்றொரு முறுமுறுத்தல். நான் கவனிக்கிறேன் .... 39'அவர்களில் இரட்சிக்கப்படாதவர்கள் அப்படி செய்திருப்பார்கள்' என்று நீங்கள் கூறலாம். ஒருக்கால் அப்படியிருக்கலாம். இரட்சிக்கப்படாதவர்களும் கலந்து அவர்களுடன் சென்றனர். உண்மை . ஆனால் வேறொன்றை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். தேவன் ஒரு செய்தியாளனை அனுப்பி, அவன் தேவனால் அனுப்பப்பட்ட செய்தியாளன் என்பதை அடையாளங் களினால் உறுதிபடுத் தியிருந்தால், அந்த செய்தியாளனுக்குக் கீழ்ப்படிதல் என்பது அவர்களைப் பொறுத்தது. முற்றிலும் உண்மை. அவர்கள் செய்தியாளனுக்கு கீழ்ப்படிந்து அவனுக்கு மரியாதை செலுத்த வேண்டியது அவசியம். யோசுவாவையும் காலேபையும் பாருங்கள். அவர்கள் மோசேயின் சார்பிலேயே இருந்தனர். ஆம்,ஐயா. மோசே எதிலெல்லாம் ஈடுபட்டானோ, அவர்களும் அதில் ஈடுபட்டனர். மோசே செய்தது சரியோ தவறோ , என்னவாயினும் அவர்கள் அவனுடன் கூட இருந்தனர். ஏனெனில் அவன் தேவனுடைய செய்தியாளன் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். 40ஒருநாள் தீர்க்கதரிசினியாகிய மிரியாமும், பிரதான ஆசாரியனாகிய ஆரோனும் கூட, மோசேயின் மனைவி எத்தியோப்பிய ஸ்திரீயாதலால், அவளை கேலி செய்து, ''விவாகம் செய்து கொள்ள நமது கூட்டத்தில் பெண்கள் இல்லையா என்ன? அதற்கு பதிலாக, அவன் இந்த பெண்ணை விவாகம் செய்து கொண்டானே' என்று எண்ணினதாக நாம் பார்க்கிறோம். அது மோசே தெரிந்துகொண்ட பெண் அல்ல. தேவன் மோசேக்காக அவளை தெரிந்தெடுத்தார். அவர்கள் அதைக் குறித்து கேலி செய்தபோது, அது தேவனுக்கு கோபமூட்டின் காரணத்தால் அவர் தீர்க்கதரிசினியாகிய மரியாமை அடித்து அவளுக்கு குஷ்டரோகம் உண்டாகச் செய்தார். அவள் என்ன செய்தாள்? அவள் தேவனுடைய செய்தியாளனை கேலி செய்து, அந்தகாலத்து உடன்படிக்கையின் தூதனிடம் அவபக்தியாய் நடந்து கொண்டாள். மோசேயின்வாயாக இருந்த பிரதான ஆசாரியனாகிய ஆரோனும் கூட அவளுடன் சேர்ந்து கொண்டான். அவனுடைய சகோதரிக்கு குஷ்டரோகம் பிடித்ததை ஆரோன் கண்டபோது, அவன் மோசேயிடம் சென்று, 'உன் சொந்த சகோதரி மரிக்க நீ அனுமதிப்பாயா?'' என்று கேட்டான். மோசே கூடாரத்துக்குள் சென்று, தேவனுடைய சமுகத்தில் முகங்குப்புற விழுந்து, அழுது, தேவனை நோக்கி கூப்பிட்டு, அவனுடைய சகோதரிக்கு இரக்கம் காண்பிக்கும்படி கெஞ்சினான். அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் இறங்கி வந்து, ஆரோனும் மிரியாமும் என் சமுகத்தில் நிற்கும்படி அவர்களை அழைத்து வா'' என்றார் (எண். 12:4). ஓ, என்னே! தேவன் மரியாதையை அதிகாரத்துடன் கேட்கிறார். தேவன் தமது செய்தியை அனுப்பும் போது, நீங்கள் அதற்கு செவிகொடுத்து, பயபக்தியாய் நடந்துகொள்ளவேண்டும். அவர்கள் உருளும் பரிசுத்தர் என்றோ , அல்லது வேறெந்த பெயரினால் அழைத்தாலும் கவலைப்படாதீர்கள். உலகம் தான் . விரும்பினதை செய்யட்டும். ஆனால் நீங்களோ மரியாதை செலுத்துங்கள்! 41மிரியாம் அங்கு நின்றாள். கர்த்தர், மிரியாமையும் மோசேயையும் இல்லை, ஆரோனையும் - உன் சகோதரனையும் சகோதரியையும் - என் சமுகத்தில் நிற்கும்படி அவர்களை அழைத்து வா“ என்றார். அவர்கள் தேவனுடைய சமுகத்துக்கு வந்த போது கர்த்தர், 'உங்களுக்கு தேவனிடம் பயமில்லாமல் போனதென்ன?' என்று கேட்டார். பிரதான ஆசாரியனாகிய ஆரோனையும் தீர்க்கதரிசினியாகிய மரியாமையும் பார்த்து அப்படி கேட்டார். ''உங்களுக்குள்ளே ஒருவன் ஆவிக்குரியவன் அல்லது தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்“ என்றார். (எண். 12:6) அவன் ஆவிக்குரியவனாகவோ அல்லது தீர்க்கதரிசியாகவோ இருந்தால். அவர், 'என் தாசனாகிய மோசேயிடம் நான் காதில் வாய்வைத்து பேசுகிறேன். நீங்கள் தேவனுக்கு பயப்படாமல் போனதென்ன?'' என்றார். வேறுவிதமாக கூறினால், நீங்கள் மோசேயைக் குறித்து பேசுவது, என்னைக்குறித்து பேசுவதற்கு சமானம். நீங்கள் மோசேக்கு மரியாதை செலுத்தாவிட்டால், எனக்கும் மரியாதை செலுத்துவதில்லை, மோசே என் தாசன்என்று உங்கள் மத்தியில் நான் நிரூபிக்கவில்லையா? உங்களுக்கோஅவன் மீது பயபக்தியே இல்லை '' என்றார். அது இக்காலத்து ஜனங்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்; மரியாதை இல்லை, கனப்படுத்துவதில்லை. அவர், ''நீ அவ்வாறு செய்ததால், குஷ்டரோகியானாய். அதனால் தான் இவை யாவும் சம்பவித்தது. மோசே என் தாசன் என்பதை நீ அறிந்திருக்கவேண்டும். அது உனக்குத் தெரியும். அவனுக்கு விரோதமாக நீ எதை கூறினாலும், அதை எனக்கு விரோதமாக கூறுபவளாயிருப்பாய்'' என்றார். 42அவளுடைய உயிரைக் காப்பாற்றும்படி மோசே முறையிட்டான். தேவன் அவளுடைய உயிரைக் காப்பாற்றினார். அதற்கு பின்பு அவள் நீண்டகாலம் உயிரோடிருக்கவில்லை. அவள் மரித்துபோனாள். ஆனால் அவளுடைய குஷ்டரோகம் நீங்கினது. அவள் ஏழு நாட்கள் பாளயத்துக்குப் புறம்பே தங்கியிருந்தாள் தன்னை சுத்திகரித்துக்கொள்ள. தேவன் அவளை சுகப்படுத்தினார். அவர் அவர்களுக்கு அறிவுறுத்த முயன்றது என்ன வெனில், ''நான் என்ன செய்கிறேனோ, அதற்கு நீங்கள் மரியாதை செலுத்த வேண்டும்.'' அந்த காலத்தில் அது தேவனுடைய மனப்பான்மையாய் இருந்ததென்றால், தேவன் மாறாதவராயிருப்பதால், அவர் இந்நாட்களில் செய்து கொண்டு வருவதற்கும் நாம் மரியாதை செலுத்த வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அவர் அதை அதிகாரத்துடன் கேட்கிறார். அவர், ''நீங்கள் அதற்கு மரியாதை செலுத்த வேண்டும். இல்லையேல் ஏதாவதொன்று சம்பவிக்கும் என்றார்''. 43அன்றொரு நாள் ஒரு மனிதன் என்னிடம் இவ்வாறு கூறினார் ... ஏழை மனிதன். அவருடைய ஜீவனத்துக்காக இந்த சந்தையிலுள்ள குப்பைகளை அவர் அடித்து கூட்டுகிறார். அவர் ஒரு லூத்தரன். அவர்கள் நற்கருணை ஆராதனை வைத்திருந்தனர். அவரால் நடக்க முடியவில்லை. எனவே அவர் வாடகை கார் ஒன்றை அமர்த்தினார். அவருக்கு போக எண்பது சென்டும், வர எண்பது சென்டும் செலவானதாக என்னிடம் கூறினார். அவருடைய அடுத்த வீட்டுக்காரர் தேவபக்தி இல்லாதவர். ஒரு நாள் காலை இவர் கர்த்தருடைய ஜெபத்தைக் கூறுவதைக் கேட்டு அவர் சிரித்து கேலி செய்தாராம். அவர் இந்த மனிதனிடம், 'வாடகை காரில் இன்று காலை எங்கு சென்று வந்தீர்?'' என்றுகேட்டார். இவர், 'நற்கருணையில் பங்கெடுக்க ஆலயத்துக்கு சென்று வந்தேன்“ என்று விடையளித்தார். அவர், நற்கருணை என்றால் என்ன?' என்று வினவினார். இவர், “நாங்கள் அப்பம் புசித்து திராட்சை ரசம் குடிப்போம்” என்றார். அவர், இன்று காலை நானும் கூட ஒரு துண்டுரொட்டியையும் சிறிதளவு (Pint) விஸ்கியையும் அருந்தினேன்'' என்றார். பாருங்கள்? 44ஒருமுறை மூன்று பையன்கள் நற்கருணையை பாவனை செய்ததை நானறிவேன். அவர்கள் ஓட்டல் அறைக்குச் சென்று பன்றி இறைச்சி நிறைத்த 'சான்ட்விச்களையும் ஒரு குப்பி விஸ்கியையும் வாங்கி, பெந்தெகொஸ்தே சபையில் அவர்கள் நடத்தும் நற்கருணையை கேலி செய்யும் வண்ணமாக, அவர்களுடைய நற்கருணையை புசித்தனர். மூன்று மாதங் களுக்குள் ஒருவன் மரித்துப் போனான்; மற்ற இருவரும் பைத்தியக்காரர் விடுதியில் சேர்க்கப்பட்டனர். நீங்கள் தேவனை அவமதிக்கக் கூடாது. நீங்கள் அவரை மதிக்க வேண்டும். உங்களுக்கு அதில் நம்பிக்கையில்லை என்றால், பேசாமலிருங்கள். அதை விட்டு விலகி நில்லுங்கள். அப்படி செய்யுங்கள், இல்லையென்றால் பயபக்தியுடன் அதில் பங்குகொண்டு, அதற்கு மதிப்பு கொடுங்கள். ஆவியைப் பெற்றவர்களை கேலி செய்யாதீர்கள். தேவனை ஆவியில் தொழுது கொள்ளுகிறவர்களுக்கு விரோதமாக ஒன்றும்பேச வேண்டாம். அவர்களை தனியே விட்டுவிடுங்கள். 45சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வாலிபப் பிரசங்கியாக நான் ஒரு தெரு மூலையில் நின்று பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு கத்தோலிக்க ஸ்திரீஅங்கு வந்தாள். அவளை எனக்குத் தெரியும். அவளுடைய கணவனும் ஒரு கத்தோலிக்கர். அவள் சிறந்த அழகி, சுமார் இருபது, இருபத்திரண்டு வயதிருக்கும். அவள் சிறு பெண்ணாயிருந்தபோதே அவளை எனக்குத் தெரியும். அவள் அங்கு வந்து நின்று, நான் வளர்க்கும் பசுவும் கூட வில்லியம் பிரன்ஹாம் கொண்டுள்ள மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள அனுமதிக்க மாட்டேன்“ என்றாள். அடுத்த நாள் இரவு, அவள் ஆஸ்பத்திரியில் மரணத்தருவாயில் இருப்பதாக கேள்விப்பட்டேன், அவளைக் கொன்றது எதுவென்று எனக்குத் தெரியாது. அவள் ஆஸ்பத்திரியில் மரணத்தருவாயில் இருந்தாள். அவளுடைய கணவர் என்னிடம் வந்தார். அவர் ஒரு கத்தோலிக்கர். அவர் விரைந்து வந்து என் மனைவிக்காக ஜெபியுங்கள். உங்களை அழைத்து வரவேண்டுமென்று அவள் மாலை நேரம் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கிறாள். அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள் என்றார். 46நான் போகலாமென்று நினைத்து, கூட்டத்தை விட்டு புறப்பட்டு காரில் ஏறி ஆஸ்பத்திரிக்கு விரைந்தேன். நான் படிக்கட்டுகளில் வேகமாக ஏறிக்கொண்டி ருந்தபோது, நர்ஸை சந்தித்தேன். அவள் ஏற்கனவே மரித்து விட்டாள்'' என்றாள் அவள். அவளுடைய கணவர், “என்னவாயினும், ஒரு ஜெபத்தை சொல்லும்'' என்றார். நான், “அவள் மரித்து விட்டாளே” என்றேன். அவர், “இருந்தாலும், ஒரு ஜெபத்தை சொல்லும்” என்றார். நான், அதனால் ஒரு உபயோகமுமில்லை' என்றேன். அவர், ''சரி, அப்படியானால் அவளைப்பார்த்து விட்டு போய் விடும்'' என்றார். நான் கீழே சென்றேன். அவளுக்கு சிகப்பு கலந்த கருமை நிறமுள்ள தலைமயிர் இருந்தது. சிறந்த அழகி. அவளுடைய முகத்தில் சில சுருக்கங்கள் இருந்தன, பெரிய பழுப்பு நிற கண்கள், நர்ஸ் என்னிடம், 'பில்லி, அவள் வேதனைப்பட்டு மரித்தாள், அதற்கு முன்பு அவள் உங்கள் பெயரை உரத்த சத்தமாய் கூறி, என்னை மன்னிக்கும்படி அவரிடம் கூறுங்கள்'' என்றாள். அவள் முகத்திலுள்ள சுருக்கங்கள் அப்பொழுது தழும்புகளைப் போல் நின்றன' என்றாள். அவளுடைய பெரிய கண்கள் சொருகிப்போய், கண் இமைகள் பாதி மூடியிருந்தன. அப்படி வேதனைப்பட்டு இறப்பவர்களுக்கு என்ன நேரிடுமென்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் அங்கேயே மலஜலம் கழித்து விடுவார்கள். அவள் அங்கு கூச்சலிட்டாள். அவள் மிகுந்த வேதனைப்பட்டு மரித்தாள்... அவள் என்னை அவமதித்ததனால் அல்ல, நான் பிரசங்கித்த சுவிசேஷத்தை தேவன் அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்து நிரூபித்த சுவிசேஷத்தை அவள் அவமதித்தாள். 47சில நாட்களுக்கு முன்பு நியூ ஆல் பனியில், ஒரு பாவியுடன் நான் நின்று பேசிக் கொண்டு, அவனைக் கிறிஸ்துவினிடம் வழி நடத்திக் கொண்டிருந்தபோது, மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் கொட்டகையிலுள்ள முரட்டுகையுடைய, பெரிய உருவம் படைத்த ஒருவன் அவன் என் நண்பன். அவனுடைய மருமகன் பக்கத்திலுள்ள அந்த கொட்டகையின் உரிமையாளர். அங்கு பகல் உணவு நேரத்தில், நான் ஒரு சான்ட்விச்சை தின்றுகொண்டு, அவனிடம் தேவனைக் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். பகல் உணவு வேளையில், கிறிஸ்துவுக்காக ஒரு ஆத்துமாவைக் கொள்ள ஒரு இடத்தை தேடிப்பிடித்து, அங்கு நான் செல்வது வழக்கம். அந்த பாவி, ''திரு. பிரன்ஹாமே, என்தாய் அப்படிப்பட்ட மார்க்கத்தை இருதயத்தை உணர்த்தும் மார்க்கத்தை கடைபிடித்திருந்தார்கள்“ என்றான். அவன் கன்னங்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. நான், 'அவர்கள் மரித்து எத்தனை ஆண்டுகளாயின?“ என்று கேட்டேன். அவன், அநேக ஆண்டுகள். அவர்கள் எனக்காக எப்பொழுதும் ஜெபம் செய்து வந்தார்கள் என்றான். நான், ''அவர்களுடைய ஜெபத்திற்கு செவி கொடுத்த தேவன். இப்பொழுது பதிலளிக்கிறார்“ என்றேன். அந்த முரட்டு மனிதன் அங்கு வந்து “ ஹல்லோ ” என்றான். அவன் குடித்திருந்தான். அவன், 'பில்லிகேள். நீ இந்த கொட்டகைக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் உன்னுடைய பழைய உருளும் பரிசுத்தர் மார்க்கத்தை இங்கே கொண்டு வராதே“ என்றான். நான் திரும்பி அவனைப் பார்த்தேன். “கிறிஸ்து வரவேற்கப்படாத இடத்துக்கு நான் வரமாட்டேன்” என்றேன். எனவே அவர் என்னிடம் திரும்பி, ''ஆ பையனே, உன் எண்ணத்தை விட்டுவிடு'' என்றார். அப்பொழுது என் இருதயத்தில் ஒரு சத்தம். 'நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுப்பாய். உன் கழுத்தில் ஏந்திரக்கல்லை கட்டி சமுத்திரத்தின் ஆழத்திலே உன்னை அமிழ்த்துவது நலமாயிருக்கும்'' என்றது. அன்று பிற்பகல் அவனுடைய மருமகன், சரக்குகள் முழுவதுமாக ஏற்றியிருந்த இரண்டுடன் ஷெவர்லே லாரியை அவன் மேல் தெரியாமல் ஏற்றி, அவனைத் தரையில் கூழாக்கி விட்டான். பாருங்கள், நீங்கள் தேவனுக்கு மரியாதை செலுத்த வேண்டும். நீங்கள் அதை செய்தே தீர வேண்டும். தேவன் மரியாதையை அதிகாரத்துடன் கேட்கிறார். எனவே மிரியாம் அதைத் குறித்து அறிந்திருக்க வேண்டும். மோசே தான் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வதற்கு தேவனுடைய ஆவியால் நடத்தப்படுகிறான் என்பதை அவர்கள் அறிந்திருந்திருக்க வேண்டும். 48இரண்டு நாட்களுக்கு முன்பு இங்குள்ள பாப்டிஸ்டு போதகர் ஒருவர் எனக்கு கடிதம் எழுதியிருந்தார். ஓ, அவர் என்னை நெருப்பில் பொறித்து எடுத்து விட்டார். அவர், ''சோம்பேறியான நீர் எலியா தீர்க்கதரிசியின் ஊழியத்துக்கு ஒப்பான ஊழியத்தை பெற்றுள்ளதாக கூறிக்கொண்டு, ஒன்றும் செய்யாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பதைக் காணும் போது!'' என்று கூறியிருந்தார். அந்த சமயத்தில் பில்லிபால் என் செயலாளராக பணியாற்றி வந்தான்; அவன் அவருக்குப் பதில் எழுதினான். அவன், ''நான் இந்த கடிதத்துக்கு பதில் போடுகிறேன்'' என்றான். ஆனால் அனுப்புவதற்கு முன்பாக, அதை நான் படிக்க வேண்டுமென்று விரும்பினேன். அதில் நிறைய சாதுரியம் அடங்கியிருந்தது. அவன், ''இது என் தந்தை எழுதும் கடிதம் மல்ல, நான் எழுதுகிறேன்“ என்று ஆரம்பித்து, ''என் தந்தைக்கு எலியாவைப் போன்ற ஊழியம் உள்ளதாகவும், ஆனால் அவர் ஆற்றங்கரைக்கு சென்று மீன் பிடிக்கும் கம்பை கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அல்லது துப்பாக்கியுடன் மலையின் மேல் சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளீர். ஆனால் எலியா மூன்று ஆண்டுகளாக ஆற்றங்கரையில் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்து கொண்டிருந்ததைக் குறித்து என்ன சொல்லுகிறீர்? அவர்கள் தேவனுடைய ஆவியால் நடத்தப்பட்டு, இத்தகைய செயல்களைப் புரிகின்றனர் என்பது உமக்குத் தெரியாதா?'' என்று எழுதினான். பாருங்கள், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வழியில் அதை நடத்த விரும்புகின்றனர். ஆனால் மனிதன் தேவனுடைய ஆவியால் நடத்தப்பட வேண்டும். நீங்கள் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அவ்வளவு தான். 49அன்றொரு நாள் இந்த நகரத்திலுள்ள ஒரு அருமையானவர் வேறொரு சகோதரனைக் கண்டு, 'பில் எங்கே?'' என்று கேட்டார். அவர், கனடாவுக்குச் சென்றிருக்கிறார்“ என்றார். மற்றவர், 'வேட்டைக்கு சென்றிருப்பாரென்று நினைக்கிறேன்“ என்றார். அவர், 'ஆம், வேட்டைக்குத் தான் சென்றிருக்கிறார் என்றார். மற்றவர், 'அது புத்தி கெட்ட செயல் என்றார். சரி, நான் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் ஒரு தரிசனத்தை கண்டு, கர்த்தர் உரைக்கிறதாவது என்னும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அங்கு சென்றேன் என்பது அந்த மனிதனுக்குத் தெரியாது. அப்படியானால் நியாத்தீர்ப்பின் நாளில் அவர் என்ன செய்யப் போகிறார்? அப்படிப்பட்ட ஒருவரின் படுக்கைக்கு சென்று அவருக்காக ஜெபிப்பதனால் என்ன பயன்? முதலாவதாக, அவருக்கு என் மேல் நம்பிக்கையில்லை. மக்கள் இப்படிப்பட்ட வைகளைக்கூறும் போது அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பது எனக்குத் தெரியாதா என்ன? அவர்கள் என் முதுகைத்தட்டி, ''சகோதரனே“ என்று என்னை அழைத்தாலும், அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதை நானறிவேன். பாருங்கள்? அவர்கள் நம்புவதில்லை. அவர்கள் உங்களை அழைத்து, ”வந்து ஜெபியுங்கள்'' எனலாம். ஆனால் அதனால் அவர்களுக்கு எந்த பயனுமில்லை. ஏனெனில் அவர்கள் அதை அவமதிக்கின்றனர். நீங்கள் அதை விசுவாசிக்கவேண்டும். உண்மையாக விசுவாசிப்பவர்களை கவனித்து, அவர்களுக்கு நேரிடும் நன்மைகளைப் பாருங்கள். பாருங்கள், நீங்கள் அதற்கு மரியாதை செலுத்த வேண்டும். 50எலியாவின் நாட்களிலிருந்த யேசபேல், எலியாவை எவ்வளவாக அவமதித்தாள் எலியா உண்மையில் அவளுடைய போதகர். நிச்சயமாக. ஆனால் அவளோ அதை ஏற்றுக்கொள்ள மறுத்தாள். அவள் தெய்வ நம்பிக்கை இல்லாதவள், இல்லை விக்கிரகத்தை வழிபடுபவள். அவளுக்கு அஞ்ஞான பூசாரிகள் இருந்தனர். இருப்பினும், எலியாவே அவளுடைய போதகர். அவன் போதகராயிருக்க தேவன் அவனை அனுப்பினார். அவன் கடிந்து கொண்டு, அவளுடைய பாவங்களை எடுத்துக் கூறினபோதிலும், அவனே அவளுடைய போதகர். அவளோ அதை ஏற்றுக்கொள்ள மறுத்து, அவனை அவமதித்தாள். அவள் அவனை வெறுத்தாள் நிச்சயமாக அப்படிச் செய்தாள். அவளுக்கு என்ன நேர்ந்தது? அவளுடைய உடலை நாய்கள் தெருவில் தின்னும்படி தேவன் செய்தார். அது உண்மை . ஏன்? எலியா பிரசங்கித்த செய்தியை அவள் அவமதித்தாள். 51தேவன் மரியாதையை அதிகாரத்துடன் கேட்கிறார். உங்களுக்கு மரியாதை இருக்க வேண்டும். நீங்கள் தேவனிடமிருந்து எதையாகிலும் பெற வேண்டுமானால், அவருக்கு நீங்கள் மரியாதை செலுத்தவேண்டும். உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நீங்கள் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும். யேசபேல் தேவனுடைய தீர்க்கதரிசியை அவமதித்ததின் மூலம் தேவனை அவமதித்தாள். எலியா தீர்க்கதரிசியென்று அவள் அறிந்திருந்தாள். இஸ்ரவேலில் எவருமே எலியாவின் ஸ்தானத்தை எட்ட முடியவில்லை. ஏனெனில் அவனுடைய தரிசனங்கள் அனைத்துமே தேவனுக்கு முன்பாக பிழையின்றி இருந்தன. ஆனால் அவன் அவர்களைக் கடிந்து கொண்டான். இரக்கம். ஆமாம்! அவன் ஒவ்வொரு ஸ்தாபனத்துக்கும் சென்று, பாவம் என்று அழைக்கப்படும் அனைத்தையும் கடிந்து கொண்டான். சிறியோர் முதல் பெரியோர் - ராஜா - வரை அவன் யாரையும் விட்டு வைக்கவில்லை. அவன் தீர்க்கதரிசியென்று அவர்கள் அறிந்து கொள்ளவேண்டியவர்களா யிருந்தனர். அவர்கள் அதை அறியாமல் இருக்க முடியாது. ஆம். ஐயா. ஆகாபும்கூட, தேசத்தில் ஏற்பட்ட பஞ்சத்துக்காக எலியாவின் மேல்குற்றஞ் சாட்டினான். பஞ்சத்தை அனுப்ப அவன் தேவனிடம் ஜெபித்தான் என்பது உண்மை . ஆம், அவன் அப்படி செய்தான். அவன், 'வானத்தை அடைக்க எனக்கு அதிகாரம் உண்டு. நான் கட்டளையிடும் வரைக்கும் இங்கு மழையோ பனியோ பெய்யாது'' என்றான். 52அந்த யேசபேல் முகத்தில் வர்ணம் தீட்டிக்கொண்டு, இங்கு மங்கும் நடந்து, ''அந்த மாய்மாலக்காரக் கிழவன் அந்த மாய்மாலக்காரக்கிழவன் தான் தேசத்திலுள்ள மக்கள் அவதிப்படும்படி, செய்கிறான்'' என்று சத்தமிடுவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? எலியா அவர்களை மறுபடியும் தேவனிடம் கொண்டுவர முயன்றான் - ஒரு தேசத்தை தேவனிடம் கொண்டு வரமுயன்றான். பாருங்கள்? அவள் தேசத்து ஜனங்களிடம் என்ன கூறினாள் என்று பாருங்கள்: “தன் மாந்திரீக சக்தியால் வானத்தை அடைத்து, மழையோ பனியோ பெய்யாதிருக்கச் செய்யும். இப்படிப்பட்ட ஒரு மனிதனை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா?'' அவள் இப்படி ஏதாகிலும் ஒன்றைக் கூறியிருப்பாள். ''அவன் ஒரு மந்திரவாதி, அவன் குறிசொல்பவனேயன்றி வேறு யாருமில்லை. அவன் மழை பெய்யாதிருக்கும்படிக்கு வானத்தை அடைத்து வைத்து ஜனங்களைத் துன்பப்படுத்துகிறான். இது தேவனுடைய சித்தம் என்றா நீங்கள் கூறுகின்றீர்கள்?'' அது தேவனுடைய சித்தமே! 53என்ன நடந்தாலும் .... அவர் என்ன செய்தபோதிலும், நீங்கள் தேவனுக்கு மரியாதை செலுத்த வேண்டும். அவர் என்ன செய்கிறாரென்று அவருக்குத் தெரியும். அது மோசமாகத் தென்பட்டாலும், பிள்ளைகள் கஷ்டப்படுகின்றனர், பெரியவர்கள் கஷ்டப்படுகின்றனர் ஆடுமாடுகள் சாகின்றன, எங்கும் தண்ணீர் இல்லை, இரவு நேரங்கள் உஷணமாயும் புழுக்கமாயும் உள்ளன. பகலில் சூரியன் வானத்தில் வெண்கலம் போல் பிரகாசித்து வெப்பமாயுள்ளது. மூன்றரை ஆண்டுகாலமாக இந்நிலை இருந்தது. எலியாமலையின் மேல் உட்கார்ந்து கொண்டு, “நான் கட்டளையிடும்வரைக்கும் வானத்திலிருந்து ஒரு துளி பனி கூட பெய்யாது'' என்றான். அது உண்மை ! ஓ , அவர்கள் அவனை எவ்வளவாக வெறுத்தனர்! 54ஆகாப் அவனைக் கண்டபோது, 'இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா?'' என்றான். வயோதிபனான எலியா அவனுடைய முகத்துக்கு நேராக, ''நான் அல்ல, நீ தான் இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன்“ என்றான். அது உண்மை. பாருங்கள், ஆகாபுக்கு அவனிடம் மரியாதை இருக்கவில்லை. எலியா ஆகாபிடம் என்ன சொன்னான் தெரியுமா? நீ நாபோத்தின் குற்றமற்ற இரத்தத்தை சிந்தினபடியால், நாய்கள் உன் இரத்தத்தையும் தெருவில் நக்கும், ஏனெனில் அவன் தேவனுடைய செய்தியாளனை அவமதித்தான். அது முற்றிலும் உண்மை . அவர்கள் அவமதித்தனர். மிரியாம் அவமதித்தாள், ஆரோன் அவமதித்தான். நீங்கள் யாராயிருந்தாலும் கிறிஸ்தவர்களா னாலும் இல்லையென்றாலும் , நீங்கள் தேவனுக்கும் அவர் புரியும் செயல்களுக்கும் மரியாதை தரவேண்டும். இல்லாவிடில் அதன் பலனை நீங்கள் அனுபவிக்க வேண்டும். இதை ஏற்றுக்கொள்ள வேண்டும், அல்லது நியாயத்தீர்ப்புக்குள் பிரவேசிக்க வேண்டும். இவ்விரண்டில் நீங்கள் விரும்பும் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். 55என் வாழ்க்கையில் நான் கண்டவைகளை மற்ற நாடுகளில், உலகின் இதரபாகங்களில் நடந்தவைகளை நான் மணிக் கணக்காக சாட்சி கூற முடியும். ஆனால் அவைகளை கூறாமல் விட்டு விட்டு, நான் உங்களுக்கு அறிவுறுத்த முயன்றுகொண்டிருக்கும் கருத்தை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் மென்று விரும்புகிறேன் -அதாவது, நீங்கள் மரியாதை செலுத்த வேண்டும். கூட்டத்தில் வாலிபர்கள் உட்கார்ந்து கொண்டு, கேலி செய்து விட்டு, இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் தெருவில் விபத்திற்குள்ளாகி நசுங்கி சாவதை நான் கண்டிருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட ஆண்டில், ஒரு இடத்தில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, வாலிபர்கள் அங்கு உட்கார்ந்து கொண்டு கேலி செய்ததையும், ஆறு மாதம் கழித்து அதே இடத்திற்கு நான் சென்றிருந்தபோது, ஏறக்குறைய அவர்கள் எல்லோருமே கொல்லப்பட்டு, அல்லது வியாதியால் பீடிக்கப்பட்டதை நான் கண்டிருக்கிறேன். அது உண்மை . நீங்கள் அதற்கு மரியாதை தரவேண்டும். 56டென்னணியில் ஒரு இரவு, ஒரு பெரிய பாப்டிஸ்டு சபையில் பிரசங்கம் செய்துவிட்டு வெளியே வந்தபோது, கதவண்டை நான் சந்தித்த அந்த வாலிபப் பெண்ணை நினைவு கூருகிறேன். அன்றிரவு நடந்த கூட்டத்தில், அவள் கிறிஸ்துவினிடம் வரும்படி அழைக்க நான் ஏவப்பட்டேன். அப்பொழுது அவள் பரிகாசமாக என் முகத்தை நோக்கி சிரித்தாள். அவள் அந்த சபையின் மூப்பர்கள் ஒருவரின் மகள். அன்றிரவு அவள் கதவருகே நின்று கொண்டு எனக்காக காத்திருந்தாள். நான் வெளியே வந்தபோது, அவள் என்னிடம், ''நீர் இப்பொழுதே இதை அறிய விரும்புகிறேன். மறுபடியும் என்னை அப்படிப்பட்ட தர்மசங்கடமான நிலையில் ஆழ்த்தவேண்டாம்.' என்றாள். நான், “தேவன் உன்னை அழைத்தார்” என்றேன். அவள், ''மூடத்தனம்! நான் வாலிபமாயிருக்கிறேன். அதற்கு இன்னும் நிறைய நாட்கள் உண்டு. எங்கள் வீட்டிலுள்ள அனைவருக்கும் போதிய மார்க்கம் எங்கள் தந்தையிடம் உள்ளது', என்றாள். ''சகோதரியே, உனக்கு அது போதாது. ஒவ்வொருவரும் தனித்தனியே தங்கள் சொந்த மார்க்கத்தை கொண்டிருத்தல் அவசியம் என்றேன். அவள், “யாராகிலும் அதைக் குறித்து என்னிடம் பேச வேண்டுமானால், அறிஞர் ஒருவரைக் கொண்டு வருவேன். உம்மைப் போன்ற ஒருவரையல்ல'' என்றாள். நான், ''போ, உனக்கு விருப்பமான அனைத்தையும் சொல். அதனால் எனக்கு ஒரு பாதகமுமில்லை. ஆனால் ஒரு நாள் அதற்காக நீ வருந்த நேரிடும்“என்றேன். 57சிறிது காலம் கழித்து, அந்த பட்டினத்தின் வழியாய் நான் செல்ல நேர்ந்தது. அவள், உட்பாவாடை கீழே தொங்கிக் கொண்டு, கையில் ஒரு சிகரெட்டுடன் நடந்து வந்து, எனக்கு விஸ்கி வேண்டுமா என்று கேட்டாள். அது தான்! இதுவே அவளுடைய சாட்சி. அவள், 'அன்றிரவு கிறிஸ்துவினிடம் வரும்படி என்னை நீங்கள் அழைத்தது ஞாபகமுள்ளதா? அது முற்றிலும் உண்மை . அன்றிரவு தேவனுடைய ஆவியானவர் என்னுடன் போராடி, நான் அவரிடம் வரும்படி எவ்வளவோ வற்புறுத்தினார். அன்று முதல் என் தாயின் ஆத்துமா நரகத்தில் அப்பத்தைப் போல் எண்ணெயில் பொறிக்கப்பட்டு, அதை பார்த்து சிரிப்பதை என்னால் காணமுடிகிறது'' என்றாள். அதுதான் நடந்தது, பாருங்கள். நீங்கள் தேவனுக்கு மரியாதை செலுத்த வேண்டும். சகோதரனே, அதை நீ செய்யவேண்டும். நீ செய்ய வேண்டும். அவ்வளவுதான். யேசபேல் அவமதித்தாள். 58வேறொரு சமயம், வீட்டில் பிள்ளைகள் பயபக்தியில்லாதவர்களாய் வளர்க்கப் பட்டனர். எலியா தேசத்தில் பஞ்சத்தை வரவழைத்ததனால் ஜனங்கள் அவன் மீது வெறுப்பு கொண்டிருந்தனர். அங்கிருந்த சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு, “எலியா பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளளப் படவில்லை. அவன் எங்கோ கொல்லப்பட்டான். அவர்கள் சவத்தை புதைத்து மறைத்து விட்டனர்'' என்று கற்று கொடுத்திருந்தனர். அவன் எடுத்துக் கொள்ளப்பட்டான் என்பதை அவர்கள் விசுவாசிக்கவில்லை. எலிசா எலியாவின் ஸ்தானத்தில் நியமிக்கப்பட்டான். எலியா எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு, எலிசா அக்காலத்து செய்தியாளனாக விளங்கினான். எலிசா ஒரு நாள்தெருவில் சென்று கொண்டிருந்தபோது, அந்த பட்டினத்து சிறுபிள்ளைகள் வெளியே ஓடி வந்து, 'மொட்டைத்தலையா, நீ ஏன் எலியாவைப் போல் ஏறிப் போகவில்லை?'' என்று அவனை நிந்தித்தனர் (2இராஜா. 2:23). எலியா மேலேறிச் சென்றான் என்பதை அவர்கள் நம்பவில்லை. அது மனிதனை நிந்திப்பதில்லை, அவனுடைய செய்தியை நிந்திப்பதாகும். அவன் எலியாவுக்குப் பிறகு நியமிக்கப்பட்டவன். அவன் மேல் அபிஷேகம் தங்கியிருந்தது. எலியாவின் ஆவி அவன் மேல்இருந்தது. அவன் சென்று, எலியா புரிந்த அதே செயல்களைப் புரிந்தான். அல்லேலூயா இயேசு, என்னை விசுவாசிக்கிறவன். நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான் என்றார். (யோவான் 14:12). ஆம். 'விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்'' (மாற். 16:17). அவர்கள் அதை அவமதித்தனர். எலிசா எலியாவை விசுவாசித்த காரணத்தால், அவர்கள் எலிசாவை அவமதித்தனர்'' எலிசாவின் மேல் ஆவி தங்கியிருந்தது, அவன் சால்வையினால் யோர்தானை அடித்து, அதைப் பிரித்தான் (2 இரா. 2:13-14). எலியா செய்த அதே அற்புதங்களை அவன் செய்தான். தீர்க்கதரிசிகளின் பள்ளியில் இருந்தபோதகர்களும் கூட, எலியாவின் ஆவி எலிசாவின் மேல் இறங்கியிருக்கிறது என்றனர் (2 இரா. 2:15). அவ்வாறு தேசத்தில் பேசிக்கொண்டனர். 59ஜனங்களோ கேலி செய்து, ''ஏ, ஏ, அங்கே பாருங்கள், அந்த உருளும் பரிசுத்தரின் கூட்டம், மூடவைராக்கியம் கொண்டவர்கள், 'எலியா மரிக்காமலே பரலோகத்துக்கு சென்றான். குதிரைகள் கீழே இறங்கி வந்து அவனைக் கொண்டுசென்றன, என்கின்றனர். நாங்கள் எதையுமே காணவில்லை என்றனர். நிச்சயமாக அவர்கள் கண்டிருக்க மாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் கண்டிருக்கவே முடியாது. நாங்கள் குதிரைகள் எதுவும் காணவில்லை, நாங்கள் எங்கும் இரதங்களின் சத்தத்தைக் கேட்கவில்லை. அறிவீனம்! அந்த கிழவன் மரித்துவிட்டான். அவர்கள் அவனை அடக்கம் பண்ணிவிட்டு, கதைகட்டுகின் றனர்'' என்றனர். இன்று அவர்கள் கூறுவது போன்றே, அதே காரியம்! அவர்கள் இயேசுவைக் குறித்து சொன்னது போல் : ''அவர்கள் இரவிலே வந்து அவருடைய சரீரத்தை களவாய்க் கொண்டு போய் விட்டார்கள்' என்று அவர்கள் கூறினர். (மத் 28:13). அவ்வாறு கூற சேவர்களுக்கு அவர்கள் வேண்டிய பணம் கொடுத்தனர். ஆனால் அவரோ மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார். எலியா அக்கினி குதிரைகள் பூட்டிய அக்கினி இரதத்தில் மேலே எடுக்கப்பட்டான். (2 இரா. 2:11). 60இந்த வாலிப தீர்க்கதரிசியாகிய எலிசா பட்டினத்தில் நடந்து சென்று கொண்டிருந்தான். அவன் வாலிபனாயிருந்த போதே, அவனுடைய தலைமயிர் கொட்டி விட்டது. அவன் போய்க்கொண்டிருந்த போது, சிறு பிள்ளைகள் அவன் பின்னால் ஓடி, 'மொட்டைத்தலையா, நீயும் ஏன் எலியாவுடன் ஏறிப்போகவில்லை?'' என்று கேலி செய்தனர். பாருங்கள்? அவர்கள் அவனை அவமதித்தனர். எலிசா என்ன செய்தான்? அவன் திரும்பிப் பார்த்து தேவனுடைய வல்லமையினால் கர்த்தரின் நாமத்தில் அவர்களை சபித்தான். என்ன நடந்தது? இரண்டு பெண் கரடிகள் காட்டிலிருந்து புறப்பட்டு வந்து அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளை கொன்று போட்டன (2 இரா. 2:24). அது உண்மை , அவமரியாதை, அவபக்தி, நீங்கள் அப்படி செய்யக் கூடாது. நீங்கள் தேவனுக்கு மரியாதை செலுத்தவேண்டும். 61அந்த பிள்ளைகளின் பெற்றோர், பிள்ளைகளே, பாருங்கள். எலியா மேலே எடுத்துக் கொள்ளப்பட்டதாக அவர்கள் கூறு கின்றனர். நமக்கு அதை பற்றிதெரியாது. அது உண்மையா இல்லையாவென்று எனக்குத் தெரியாது. எனவே அதைக் குறித்து ஒன்றுமே பேசாமலிருப்பதே சிறந்தது. நீங்கள் சும்மாயிருங்கள். அவன் இவ்வழியாக போகும்போது ... எலிசா இன்று நமது பட்டினத்துக்கு வரப்போவதாக கேள்விப்படுகிறோம். அவன் தெருக்கூட்டம் ஒன்றை இங்க நடத்தப்போகிறானாம். நீங்கள் பள்ளிக்குப் போகும்போது, அவனைக் காண நேர்ந்தால் போதகரே, எப்படியிருக்கிறீர்கள்? ஐயா, எப்படியிருக்கிறீர்கள்?' என்று விசாரித்து, அவனுடன் பேசுங்கள்“ என்று அறிவுரை கூறியிருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக, தந்தையும் தாயும் உணவு உண்ணும் நேரத்தில்,“உனக்குத் தெரியுமா? அந்த உருளும் பரிசுத்தர் கிழவன் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட ஒன்றை உன்னால் நம்ப முடிகிறதா? பூசனிக்காய்போன்ற தலையுடைய இந்த மொட்டை தலையனுக்கு இன்னும் முப்பத்தைந்து வயதுகூட ஆகவில்லை, அதற்குள் மொட்டையாகி விட்டான். அவன் இங்கு வந்து தெருக்கூட்டம் நடத்தப் போகின்றானாம். அப்படிப்பட்ட அறிவீனமான ஒன்றை நாம் நம்ப வேண்டுமாம். அவன் கேலிக்கூத்து அல்லாமல் வேறொன்றுமில்லை. அது மாத்திரம் தான் அது. அவன் நமது சபைக்கு வரமாட்டானாம், பார்த்தாயா? எலியாவைப் போலவே இவனும் நமது சபைகளுக்கு வரமாட்டேன் என்கிறான் .... அவன் ஏதோ ஒருவிதமான மந்திரவாதத்தைக் கொண்டிருக்கிறான், அது ஏமாற்று வித்தை” என்று கேலி செய்ததை அந்த பிள்ளைகள் கேட்டிருப்பார்கள். பெற்றோர் அதை நம்பவில்லை. சிறுவர்களும் வீட்டில் அதையே கற்றனர். 62அவர்கள் பக்தியும் மரியாதையும் செலுத்த கற்பிக்கப்பட்டிருந்தால், அவர்கள் தேவனுடைய தீர்கதரிசியிடம் சென்று அவர்களுக்காக ஜெபம் செய்யும்படி கேட்டுக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களோ அவனை கேலி செய்து, அவனைப் பார்த்து சிரிக்க கற்பிக்கப்பட்டிருந்தனர். இன்றைய பிள்ளைகளும் அதே நிலையில் உள்ளனர். அவர்கள் அநேகர் இன்று நடக்கும் தெருக் கூட்டத்தையும், சுவிசேஷம் பிரசங்கிக்கப் படுதலையும் பார்த்து கேலி செய்வார்கள். எலிசா அவர்களை கர்த்தருடைய நாமத்தில் சபித்தான் - பிள்ளைகளின் காரணமாக அல்ல, அவபக்தி கொண்ட பெற்றோர்களின் காரணமாக, அவர்கள் தேவனை அவமதிக்கும்படி தங்கள் பிள்ளைகளை வளர்த்திருந்தனர். இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து அவர்களில் நாற்பத்திரண்டு பேர்களை கொன்று போட்டன. அது அவபக்தி. தேவன் மரியாதையை அதிகாரத்துடன் கேட்கிறார். அவர்கள் அவருடைய தீர்க்கதரிசியை அவமதித்த போது, அவரை அவமதித்தனர். அவர்கள் விசுவாசிக்கா விட்டால், வாயை மூடிக் கொண்டு பேசாமலிருக்க வேண்டும். ஆனால் அவர்களோ ஏதாகிலும் சொல்லியே ஆகவேண்டும். அவர்கள் சொல்லத்தகாத ஒன்றை சொன்னார்கள். அவர்களுக்கு நேர்ந்தது என்ன? 63அதற்கு மரியாதை கொடுத்த சிலரை நாம் பார்ப்போம். சூனேமியாளை நாம் எடுத்துக் கொள்வோம். அவள் தீர்க்கதரிசியாகிய எலிசாவிடம் எப்படி நடந்து கொண்டாள் என்று பார்ப்போம். அவள் இஸ்ரவேல் தேசத்தை சேர்ந்தவளல்ல. அவள் சூனேம் நாட்டைச் சேர்ந்தவள். ஆனால் அவள் தேவன் பேரில் விசுவாசம் கொண்டிருந்தாள். இந்த மனிதன் பட்டினத்தின் வழியாக செல்வதை அவள் கண்டிருக்கிறாள். அவனுடைய பிரசங்கத்தை அவள் கேட்டிருக்கிறாள், அவன் செய்த அற்புதங்களை அவள் கண்டிருக்கிறாள். வரலாறு இவ்வாறு கூறுகின்றது. அது உண்மையோ இல்லையோவென்று எனக்குத் தெரியாது, ஒருநாள் சில காட்டு நாய்கள் ஒரு சிறு பெண்ணைப் பிடிக்க ஓடிவந்ததாம். இது வேதத்தில் இல்லை, இது நான் படித்த ஒரு கதை. அந்த சூனேமியாள் அப்பொழுது ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தாள். இந்த நாய்கள் அந்த பெண்ணைக் கொல்லப் போவதை அவள் பார்த்துக்கொண்டு நின்றாள். அப்பொழுது இந்த பரிசுத்த மனிதன் அவ்வழியே வந்தான். இதை கண்டதும் அவன் தன் கைத்தடியை கர்த்தரிடம் உயர்த்தி, இந்த சிறு பெண்ணின் மேல் இரக்கம் காண்பிக்க கெஞ்சினான். அப்பொழுது நாய்கள் அவளைக் கொல்லாமல் திரும்பி சென்று விட்டனவாம். அது உண்மையாக நடந்ததா இல்லையாவென்று எனக்குத் தெரியாது. அது ஒருக்கால் உண்மையாயிருக்கலாம் என்று தோன்றுகிறது. எனக்குத் தெரியாது. 64இந்த ஸ்திரீ, இவன் பரிசுத்தவான் என்று கண்டாள் என்பதாக வேதம் கூறுகிறது (2இரா. 4:9). ஏதோ ஒன்று நடந்து கொண்டி ருக்கிறது என்பதை அவள் கண்டு கொண்டாள். அவன் யாரென்று அவள் அறிந்துகொண்டு, அவன் தேவனிடத்தி லிருந்து வந்த பரிசுத்தவான் என்பதை கண்டு கொண்டாள். யேசபேல் எலியாவை அவமதித்தது போல், இவள் இவனை அவமதிக்காமல், இவனுக்கு மரியாதை செலுத்தினாள். அவள் தன் கணவனை நோக்கி, ''நமக்கு இதை செய்ய முடியும். நாம் இவருக்கு ஒரு சிறிய அறை வீட்டைக் கட்டித்தரலாம் என்று உம்மை கேட்டுக் கொள்கிறேன். அவர்களைப் பாயிருக்கிறார். தங்குவதற்கு அவருக்கு நாம் ஒரு சிறிய இடத்தைத் தருவோம். அவரை நான் கவனித்துக் கொண்டு வருகிறேன். அவருக்கு வயதாகின்றது. அவர் தலைமயிர் நரைத்துப் போய் அது தாடி வரைக்கும் தொங்குகின்றது. அவருடைய கைத்தடி, அவருடைய மெலிந்த கரங்கள், அவர் நடக்கும்போது கைகளில் தொங்கிக் கொண்டிருக்கின்ற தசைகள் ஆடுகின்றன. அவர் அறையில் ஒரு சிறுகுப்பி எண்ணெயை தொங்க விட்டுக்கொண்டு, ஆட்டுத் தோலைப்போர்த்திக் கொண்டு, கடுமையான வெயிலில் நடந்து வருகிறார். அவருடைய உடல் வெயிலில் கருகி சிகப்பாயுள்ளது அவர் தங்கி இளைப்பாற ஒரு சிறு இடத்தை நாம் கட்டித்தருவோம். வீடு கட்டும் கான்டிராக்டரை நாம் வர வழைத்து, அவருக்காக ஒரு சிறு இடத்தை கட்டித் தருவோம். ஏனெனில் அவர் கொண்டுள்ள ஆவியின் மூலம், அவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன். அவர் தேவனுடைய மனிதன்“ என்றாள். ஓ, ஓ,என்ன ஒரு வித்தியாசம்! 65அவளுடைய கணவர் ஒப்புக் கொண்டார் .... அவர் ஒருக்கால் இவ்வாறு கூறியிருப்பார்: அன்பே, நானும் அவரைக் கவனித்திருக் கிறேன், அவர் பேசுவதைக் கேட்டிருக்கி றேன், அவர் செய்த அற்புதங்களைக் கண்டிருக்கிறேன். அவர் தேவனுடைய பரிசுத்தவான் என்று நானும் அறிவேன். நாம் அப்படியே செய்யலாம்'' என்று. எனவே அவர்கள் கான்ட்ராக்டரை அழைத்து ஒரு நல்ல சிறிய அறை வீட்டை அவனுக்குக் கட்டித் தந்து, அவன் இளைப்பாற ஒரு படுக்கையை அமைத்துக் கொடுத்து, அவன் கால்களைக் கழுவ ஒரு பாத்திரம் தண்ணீர் வைத்தனர். (2 இரா. 4:10). தீர்க்கதரிசி வந்தபோது, அவனுக்காக ஒரு இடம் அமைத்துக் கொடுத்தது அவனுடைய ஆத்துமாவை மகிழ்வித்தது. அவன் கேயாசியை அழைத்து, அவளுக்கு நான் என்ன செய்ய வேண்டுமென்று அவளைக் கேள். நான் ராஜாவினிடத் திலாவது சேனாபதியினிடத்திலாவது பேச வேண்டிய காரியம் உண்டா என்று கேள்' என்றான். அவளோ, 'என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன். எனக்கு ஒருகுறைவுமில்லை. என்றாள் . (2இரா.4:13) ஆனால் கேயாசி அவனிடம், ''அவளுக்குப் பிள்ளை இல்லை, அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன்'' என்றான். எலிசா கால்களையும் முகத்தையும் கழுவிக் கொண்டு, அவள் அவனுக்கு அமைத்து கொடுத்த படுக்கையின் மேல் படுத்துக் கொண்டிருப்பதை என்னால் கற்பனை செய்யமுடிகிறது. அப்பொழுது அவன் தேவனுடைய தரிசனத்தைக் கண்டிருப்பான் (அவர்கள் எப்பொழுதும் தரிசனம் காண்பது வழக்கம்). அவன் கேயாசிடம், ''அவளை என் முன்னால் அழைத்து வா'' என்றான் . ஓ என்னே 'அவளை அழைத்து வா. ஏனெனில் அவள் தேவனுக்கு மரியாதை செலுத்தினாள். இங்கு வரும்படி அவளைக் கூப்பிடு. அவள் வாசற்படியிலே நின்ற போது, அவள், ''கர்த்தர் உரைக்கிறதாவது: அடுத்த வருடம் இதே நேரத்தில் நீ ஒரு குழந்தையைப் பெறுவாய் என்றான். அவன் கூறினபடியே, அடுத்த வருடம் அதே நேரத்தில் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. 66அதன் பின்பு சாத்தான் கிரியை செய்தான். பையனுக்கு ஏறக்குறைய பன்னிரண்டு வயதான போது, அவனுடைய தகப்பனார் ஒரு நாள் அவனை வயலுக்கு அனுப்பினார். அப்பொழுது சாத்தான். “இவனை ஒழித்து விடுகிறேன்'' என்று சொல்லி, அவனுக்கு சூரிய வெப்பத் தாக்குதல் (Sunstroke) உண்டாக்கும்படி செய்தான். அவன் தன் தாயின் மடியில் மரித்துப்போனான். அவள் அதனால் சோர்ந்து போனாளா? இல்லை, ஐயா. அவள் கழுதையின் மேல் சேணம் வைத்து ஏறி தன் வேலைக்கார னிடம், ''எங்கும் நிற்காமல் கர்மேல் பர்வதம் வரைக்கும் போ. அன்றொரு நாள் அவரை நான் அங்கு கண்டதுண்டு'' என்றாள். ஓ, ஓ, ஓ, ஓ, என்னே பார்த்தீர்களா? அதுதான் மரியாதை அளித்தல். அது தான் மரியாதை அளித்தல். அவளுடைய கணவன், ''நீ தேவனுடைய மனிதனிடமா போகின்றாய்? இன்று அமாவாசையும் அல்ல, ஓய்வு நாளும் அல்ல. அவர் அங்கிருக்க மாட்டார் என்றான். அவள், ''எல்லாம் நல்ல விதமாக முடியும். கழுதையின் மேல் நான் சேணம் வைத்து செல்லட்டும்' என்றாள். எனவே அவளும் வேலைக்காரனும் புறப்பட்டு சென்றனர். 67அவர்கள் கர்மேல் பர்வதத்தை அடைந்தனர். எலிசா குகையிலிருந்து, இவர்களிருவரும் வந்து கொண்டிருப்பதைக் கண்டான். அவன் குகைக்கு வெளியே வந்து, தன் வேலைக்காரனாகிய கேயாசியிடம், ''வருவது சூனேமியாளைப் போல் காணப்படுகிறது. அவளுக்கு துக்கம் ஏற்பட்டிருக்கும் போலிருக்கிறது என்று சொல்லி, அவன் வேலைக்காரனிடம், அவளுக்கு எதிர்கொண்டு போ. அவள் இருதயத்தில் துக்கமடைந்திருக்கிறாள். கர்த்தர் அதை எனக்கு அறிவிக்கவில்லை'' என்றான். பாருங்கள். தேவன் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்ல வேண்டுமெனும் அவசியமில்லை. அவர் தமது தீர்க்கதரிசிகளிடமும் கூட எல்லாவற்றையும் சொல்வதில்லை. அவர் தமது விருப்பப்படி செய்கிறார். அவர் தேவன். 68எலிசா, ''தேவனே என்றான். அவன் தேவனிடம், 'அவள் வரப்போகிறாளென்று என்னிடம் ஏன் கூறவில்லை?'' என்று கேட்டிருக்கலாம். அப்படி செய்திருந்தால், அவன் ஒன்றையும் கண்டிருக்க முடியாது. எவ்வாறிருப்பினும், எலிசா அதை பொருட்படுத்தவில்லை. அவள் அவனிடம், 'நீர் தேவனுடைய ஊழியக்காரன் என்று உம்மை அழைத்துக் கொண்டீரே மாய்மாலக்காரனே, நீர் உருளும் பரிசுத்தரேயன்றி வேறு யாருமில்லை என்று கூறியிருக்கலாம். அப்பொழுது ஒன்றும் நடந்திருக்காது. பாருங்கள் நாம் என்ன செய்கிறோம் என்று பார்க்க தேவன் சில நேரங்களில் நம்மை சோதிக்கிறார். 69அவன் அப்படி செய்வதற்கு பதிலாக, அவனுடைய பாதங்களை அடைந்து, தேவனை வணங்குவது போல் வணங்கினாள். அவள் அவனிடம் நடந்ததைக் கூறினாள். எலிசா கேயாசியிடம், “நீ போய், என் தடியை பிள்ளையின் மேல் வை என்றான். ஆனால் அவளோ, ''நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் என்னுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன். தேவன் உமக்குத் தரிசனம் அனுப்பும் வரைக்கும், நான் இங்கேயே தங்கியிருப்பேன்“ என்றாள். ஓ, என்னே! எலிசாசற்று நேரம் இருந்துவிட்டு, அவன் இடையைக் கட்டிக்கொண்டு, கையில் தடியை எடுத்துக் கொண்டு அவளுடன் சென்றான். அவன் அந்த பையனைக் கிடத்தியிருந்த அறைக்குள் சென்றான். அந்த பையன் மரித்திருந்தான். இவன் இங்கும் அங்கும் உலாவினான். அந்த ஸ்திரீ பயபக்தியுடையவள். அவள் அவனுக்கு மரியாதை கொடுத்து அவன் தேவனுடைய மனிதன் என்று விசுவாசித்த காரணத்தால், தேவன் பதிலளிக்கும் வரைக்கும் அவன் இங்கும் அங்கும் உலாவினான். ஆமென். பிறகு அவன் பிள்ளையின் மேல் குப்புறப் படுத்துக்கொண்டான், பிள்ளை ஏழுதரம் தும்மினான். அவனை உயிருள்ளவனாய் தன் தாயினிடம் கொடுத்தான். பிறகு அவன் வெளியே நடந்து, குகையை அடைந்தான். அவள் தேவனுடைய மனிதனுக்கு மரியாதை கொடுத்தாள். ஆமென் தேவன் மரியாதையை அதிகாரத்துடன் கேட்கிறார். 70மார்த்தாளைக் குறித்தென்ன? அவள் எப்பொழுதுமே இயேசுவுக்கு நல்ல விருந்து பண்ணவேண்டுமென்று எண்ணம் கொண்டிருந்தாள். மரியாளோ தேவனுடைய வார்த்தையைக் கேட்க விரும்பினாள். எனவே அவள் இயேசுவின் பாதத்தில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள். தலையணை உறையை மாற்றினார்களோ, அல்லது தொங்கு திரையிலுள்ள (curtain) தூசியைத் தட்டினார்களோ, அல்லது உண்ண ஏதாகிலும் உண்டா என்றெல்லாம் அவள் கவலை கொள்ளவில்லை. அவள் இயேசுவின் வார்த்தைகளை மாத்திரமே கேட்க விரும்பினாள், ஆனால் மார்த்தாளோ அவருக்கு நல்ல விருந்து சமைக்க விரும்பி, உணவு மேசை நாற்காலிகள் மிருதுவாக உள்ளனவா, மேசையின் மேல் உணவு ஒழுங்காக வைக்கப்பட்டுள்ளதா, எல்லாம் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்று கவனித்துக் கொண்டாள். அவள் தன் சொந்த வழியில் இயேசுவுக்கு சேவை செய்ய விரும்பினாள். மரியாளும் தன் சொந்தவழியில் இயேசுவுக்கு சேவை செய்ய விரும்பினாள். ஆனால் ஒரு நாள் லாசரு வந்தபோது ...மார்த்தாள் இன்னும் அதிகமாக சிரத்தை காண்பித்திருக்க வேண்டுமென்று அநேகர் அவளுக்கு விரோதமாய் பேசுகின்றனர். ஓ, இல்லை, சற்றுபொறுங்கள். மார்த்தாளுக்கு தன் சிரத்தையை காண்பிக்க நேரம் வந்தது. அப்பொழுது இயேசு... அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாயிருந்த போது, அவனுக்கு ஜெபிக்கும்படி மார்த்தாள் இயேசுவிடம் ஆள் அனுப்பினாள். அவர் வரவில்லை. அவர் அழைப்பை அசட்டை செய்தார். அவர் வேறெங்கோ சென்று விட்டார். அவள் மறுபடியும் ஆள் அனுப்பினாள். அவர் அப்பொழுதும் அழைப்பை அசட்டை செய்தார். 71அவர் வந்தபோது, அவள் அவரிடம் சென்று, “நீர் ஏன் வரவில்லை? நான் உம்மை அழைத்த போது, நீர் ஏன் வரவில்லை? என் சகோதரன் வியாதியாய்படுத்திருந்தான், நாங்கள் எங்கள் சபையை விட்டு வெளியே வந்தோம், எங்கள் ஸ்தாபனத்தை விட்டு வெளியே வந்தோம். உமது செய்தியைப் பின்பற்ற நாங்கள் எல்லாவற்றையும் செய்தோம். ஏனெனில் நீர் தேவனுடைய மனிதன் என்று நாங்கள் விசுவாசித்தோம். ஆனால் எப்படி ஒரு தேவனுடைய மனிதன் .....நாங்களிருவரும் அனாதைகளாகி விட்டோம். நாங்கள் மூன்று பேருமே இங்கு அனாதைகளாயிருந்தோம், நாங்கள் தேவாலயத்துக்கு மெல்லிய சித்திரத் தொங்கல் ஆடை(tapestries) செய்து விற்று, ஜீவனம் நடத்தி வந்தோம். நாங்கள் அங்கு அங்கத்தினர்களாயிருந்தோம். ஆனால் நீரோ எங்களை ஏமாற்றி, நீர் பிரசங்கித்ததை விசுவாசிக்கும்படி செய்து, நீர் தேவனுடைய குமாரனென்றும், தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசியென்றும் உம்மை அழைத்துக் கொண்டீர். உம்மை அழைத்த போது, அதற்கு செவிகொடுக்காத மனிதனாகிய உம்மை நாங்கள் எப்படி நம்ப முடியும்?உம்மை எனக்கு அவசியமிருந்தபோது, நான் உமக்கு அனுப்பின செய்தியை அசட்டை செய்து போய் விட்டீர். நான் மறுபடியும் செய்தியனுப்பினேன். அப்பொழுதும் நீர் அசட்டை செய்தீர். நீர் ஏன் அப்படி செய்தீர்?''என்று அவரைக் கடிந்து கொண்டிருந்திருக்கலாம். அவள் அப்படி செய்திருந்தால், கதையே வேறுவிதமாகியி ருக்கும். 72ஆனால் அவள் என்ன செய்தாள்? அவள் அவரிருந்த இடத்திற்கு ஓடிச்சென்று அவர் பாதங்களில் விழுந்து, 'ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்க மாட்டான் என்றாள் (யோவான் 11:21). ஓ, பார்த்தீர்களா? அவள் என்னசெய்தாள்? அவள் மரியாதை செலுத்தினாள். அவள் அவரை ஆண்டவர் என்றழைத்தாள். ''ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் ('நான் உமக்கு ஆள் அனுப்பினேன்'' என்றல்ல. அதையெல்லாம் அவள் மறந்து விட்டாள். இப்பொழுது நீர் இங்கு வந்துவிட்டீர். நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்க மாட்டான்.'' அவர், ''உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்“என்றார். அவள், “ஓ, ஆம் ஆண்டவரே. உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிரோடெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்”என்றாள். இயேசு ''நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென் றைக்கும் மரியாமலும் இருப்பான்' என்றார் (யோவான் 11:25). அவள், “ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுதும் ஆண்டவரே ஓர் இப்பொழுதும். ('ஆண்டவரே, நீர் இதை செய்திருக்க வேண்டும், அதை செய்திருக்க வேண்டும்'' என்றல்ல) இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவ தெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார். (யோவான் 11:22). அது தான். 73அதுபோன்று நாம் இன்றிரவு யாரிடத்திலாகிலும், “ஓ, என் சகோதரனே, நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ, அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று நிச்சயித்திருக்கிறேன்'' என்று கூறினால் எவ்வளவு நலமாயிருக்கும் அதே பலன் கிடைக்கும். அவர் எவ்வளவு மகத்தானவராக இருந்த போதிலும் அவர் தேவனுடைய குமாரனாயிருந்தார் என்று நாமறிவோம். ஆனால் அவள் அவரை அவமதித்திருந்தால், அது கிரியை செய்திருக்காது. அவள் தன் இருதயத்திலிருந்து, ''இப்பொழுதும் ஆண்டவரே, நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார்“ என்றாள். அதுதான். அதை அவள் இருதயத்தில் விசுவாசித்தாள். அவர் வேட்டை பயணம் அல்லது மீன் பிடிக்கும் பயணம் மேற்கொண்டிருந்தாலும், அது எந்த விதமான வித்தியாசத்தையும் அவளில் உண்டாக்கியிருக்காது. 74அவ்வாறே எலிசா வேட்டை பயணம் மேற்கொண்டு எங்காவது சென்றிருந்தால், அது சூனேமியாளுக்கு எந்த விதமான பாதிப்பையும் உண்டாக்கியிருக்காது. அவள் அப்பொழுதும், அவன் தேவனுடைய மனிதன் என்று விசுவாசித்திருப்பாள். நிச்சயமாக. அவன் என்ன செய்த போதிலும், அவன் அவளுடைய பார்வையில் தேவனுடைய மனிதனாகவே திகழ்ந்தான். ஏனெனில் தேவன் அவனுடைய வாழ்க்கையில் அசைவாடுவதை அவள் கண்டிருந்தாள். அவ்வாறே, என்ன நேர்ந்தாலும் மார்த்தாளுக்கு கவலையில்லை. தேவன் இயேசுவுக்கு செய்ததை அவள் கண்டிருந்தாள். அவள், இப்பொழுதும் ஆண்டவரே, நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார்'' என்றாள். ஆ, பார்த்தீர்களா? அவர், ''உன் சகோதரன் உயிர்தெழுந்தி ருப்பான்“ என்றார். அவர், அவனை எங்கே வைத்தீர்கள்?' என்றார். அவர்கள் கல்லறைக்குச் சென்றனர். லாசரு மரித்து நான்கு நாட்களான பிறகு, அவர் லாசருவை கல்லறையிலிருந்து வெளியே வரும்படி கூப்பிட்டார். ஏன்? ஏனெனில் லாசருவின் சகோதரி அவருக்கு மரியாதை காண்பித்தாள். 75உங்களால் மனிதனுக்கு மரியாதை செலுத்த முடியாவிட்டால், அவர் தேவனில் கொண்டுள்ள அவருடைய உத்தியோகத் துக்காவது அவருக்கு மரியாதை கொடுங்கள். அது முற்றிலும் உண்மை ! அவருக்கு மரியாதை கொடுங்கள். போதகர் வந்தால், அவரை மதியுங்கள். சபையோர் போதகரை குறை கூறி, ஏளனம் செய்து பேசுவதை நான் கண்டிருக்கிறேன். அந்த போதகர் உங்களுக்கு என்ன செய்யமுடியும்?ஒன்றுமே செய்ய முடியாது. இந்த சபையை நான் கூறவில்லை, நான் கண்ட மற்ற சபைகளைக் கூறுகிறேன் ..... நீங்கள் உங்கள் போதகரை நேசிக்கவேண்டும். அவரும் ஒரு மனிதரே, ஆனால் தேவன் அவரைப் போதகராக்கியிருக்கிறார் என்பதை நீங்கள் உணர வேண்டும். பரிசுத்த ஆவியானவர் அவரைக் கண்காணியாக நியமித்திருக்கிறார். அப்படியானால் அதற்கேற்ற மரியாதை நீங்கள் அவருக்கு கொடுக்கவேண்டும். போதகர் என்ன செய்த போதிலும், அவர் தேவனுடைய ஊழியக்காரர் என்னும் முறையில், உங்கள் இருதயத்தில் அவருக்கு மதிப்பு கொடுத்தால், அதற்காக தேவன் உங்களை மதிப்பார். ''என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்'' என்று இயேசு கூறினார். (யோவான் 13:20). என்னை ஏற்றுக்கொள்ளாதவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ள மாட்டான். ''பாருங்கள், தேவன் அவர்களுடைய பிதாவென்று அவர்கள் கூறிக் கொண்டனர். அவரோ, 'உங்கள் பிதா பிசாசு“ என்றார். (யோவான் 8:44). எனவே, பாருங்கள், நீங்கள் அதற்கு மரியாதை கொடுத்து, அதை விசுவாசித்து, அவர் இருக்கிறார் என்று விசுவாசிக்க வேண்டும். ஆம், மார்த்தாள் அதை விசுவாசித்தாள். 76இன்று காலை இந்த சிறிய சம்பவத்தைக் குறித்து கூறினேன். அந்த சீரோபோனிக்கியா தேசத்து ஸ்திரீ இயேசுவிடம் வந்தபோது, அவள் எவ்வளவு கடுமையாகப் புறக்கணிக்கப்பட்டாள் என்பதைப் பாருங்கள், அவர் யூதன், அவள் புறஜாதி ஸ்திரீ, அவள் அவரிடம் ஓடிவந்தாள். அவரை எப்படி அணுகவேண்டுமென்று அவளுக்குத் தெரியவில்லை. அவளுக்கு ஒரு தேவையிருந்தது. அவர் தேவனுடைய குமாரன் என்பதை அவள் அறிந்திருந்தாள். அவள் அதை விசுவாசித்தாள் ... தேவன் மற்றவர்களுடைய ஜெபத்துக்கு பதிலளிப்பதால், அவளுடைய ஜெபத்துக்கும் அவர் பதிலளிப்பார் என்னும் நிச்சயம் அவளுக்கிருந்தது. அவர் கூறினது தேவனுடைய வார்த்தை என்பதை அவள் அறிந்திருந்தாள். அவர் கூறினது யூதர்களுக்கு தேவனுடைய வார்த்தையாயிருக்குமானால், அது புறஜாதி களுக்கும் தேவனுடைய வார்த்தையாக இருக்க வேண்டும். இயேசு அவளுக்கு ஒரு சோதனையைக் கொடுத்தார். அவள், 'ஆண்டவரே, எனக்கு இரங்கும்'' என்றாள் : இல்லை, அவள், ''தாவீதின் குமாரனே“ என்றாள் (மத். 15:22). ஏனெனில் யூதர்கள் அவரைத் 'தாவீதின் குமாரன்” என்றழைப்பதை அவள் கேட்டிருக்கிறாள். அவர் அவளுக்கு தாவீதின் குமாரன் அல்ல. பாருங்கள்?... ''தாவீதின் குமாரனே ஒரு யூதன் அவரை அவ்வாறு அணுக முடியும். அவள் அவர்கள் அவ்வாறு அழைப்பதைக் கேட்டிருக்கிறாள். அவளும் அவர்களைப் போலவே அவரிடம் வரமுயன்றாள். அவருக்கு மரியாதை காண்பிக்க அவள் எண்ணினாள். அவள் மரியாதை காண்பிப்பது போல் பாவனை செய்யவில்லை. அவள் அப்படி செய்திருந்தால், இயேசு அதை அறிந்திருப்பார். 77அவள் அவரிடம் வந்து, தாவீதின் குமாரனே, என் மகள் மேல் இரங்கும், அவள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள்'' என்றாள் (மத். 15:22). அவர் திரும்பி அவளைப்பார்த்து, பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல'' என்றார். அவள், “மெய்தான் ஆண்டவரே, ஆண்டவரே அப்பொழுது அவள் புரிந்து கொண்டாள் - அவர் அவளுக்கு தாவீதின் குமாரன் அல்ல, ஆனால் பிள்ளைகள் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளை ... இல்லை, நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே'' என்றாள். அது கிரியை செய்தது. அது தான். அது மரியாதை. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக, ''உன் விசுவாசம் பெரிது. நீ வீட்டுக்குப் போ, நீ விசுவாசித்தபடியே, உன் மகள் சுகமாயிருக்கக் காண்பாய்' என்றார். அதுதான். ஏன்? அது அவளுடைய அணுகு முறை. 78அவர், ''பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்று சொன்னபோது, அவள் பதிலுக்கு வேறெதாவது கூறியிருந்தால் என்னவாயிருக்கும்? ஒரு கத்தோலிக்க பெண் என்னிடம் வந்து, ''ஓ, சகோ.பிரன்ஹாமே, இங்குள்ள ஜனங்களுக்காக நீர் ஏறெடுக்கும் ஜெபங்களுக்கு தேவன் செவிகொடுக்கிறார் என்றறிவேன். எனக்காக ஜெபிப்பீர்களா? என்று கேட்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். நான், இந்த பிள்ளைகளின் நேரத்தை வீணாக்குவது நல்லதல்ல. பெந்தெகொஸ்தேயினருக்கு ஜெபம் செய்ய மாத்திரமே நான் இங்கிருக்கிறேன், கத்தோலிக்கர்களாகிய உங்களுக்கல்ல'' என்று பதிலுரைத்தால் அவள் என்ன செய்திருப்பாள்? பாருங்கள்? ஓ, அவள் கோபங்கொண்டு இங்கிருந்து விரைந்து சென்றிருப்பாள். ஆனால் இந்த ஸ்திரீயோ, 'மெய்தான் ஆண்டவரே, மெய்தான் ஆண்டவரே. நாய்க்குட்டிகளாகிய நாங்கள் எஜமானின் மேசையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்ன ஆயத்தமாயிருக்கிறோம்'' என்றாள். பாருங்கள், அது உடனே அவரைத் தொட்டது. அவர், ''உன் விசுவாசம் பெரியது'' என்றார். வேறொரு சம்பவத்தை நாம் காண்கிறோம்... பாருங்கள், அது அவளுடைய அணுகும் முறை, அவள் கொண்டிருந்த மரியாதை. அவள் அவருக்கு மரியாதை கொடுத்தன் மூலம் தேவனுக்கு மரியாதை கொடுத்தாள். 79ஒரு காலத்தில் ரோமன் ஒருவன் இருந்தான். (லூக். 7: 2-10). அவன் மிகவும் பெரியவன். அவன் யூதர்களை நேசித்தான். அவனுடைய வேலைக்காரன் வியாதியாயிருந்தான். அவன் சென்று இயேசுவைக் கேட்க தன்னை தகுதியாக எண்ணவில்லை. பாருங்கள், நீங்கள் எப்பொழுதுமே உங்கள் தகுதியை விட மிகவும் குறைந்தவர்களாகவே உங்களை எண்ணிக்கொள்ள வேண்டும். உங்கள் பார்வையிலே நீங்கள் எளியவராகக் காணப்படவேண்டும். பாருங்கள்? நீங்கள் பெரியவர்களாயிருந்தால், மற்றவர்கள் உங்களைப் பெரியவர்கள் என்று கூறட்டும். பாருங்கள்? நீங்கள், இந்த ஸ்திரீ அல்லது .... இந்த மனிதன், தான் நூற்றுக்கு அதிபதி என்று கூறிக் கொண்டான். அவனுடைய வேலைக்காரன் வியாதிப்பட்டிருந்தான். வியாதியாயிருந்த இந்த வேலைக்காரன் சுகம் பெற அவன் இயேசுவிடம் ஆட்களை அனுப்பினான். இயேசு, 'நான் வந்து சுகப்படுத்துவேன்'' என்றார். 80அவர் வழியில் வந்து கொண்டிருந்ததை இந்த ரோமன் கண்டான். அவன், “ஓ, என்னே இந்த பரிசுத்தமுள்ளவர் இதோ வருகிறார். நான் ஒன்றுக்கும் உதவாத புறஜாதியான். நான் ஒரு ரோம் நூற்றுக்கு அதிபதி, ஒரு தளபதி, ஒரு அதிகாரி. நான் ஒரு யூதனல்ல. அந்த பரிசுத்த மனிதர் என் வீட்டிற்குள் வர நான் பாத்திரன் அல்ல' என்று கூறுவதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. அவன் கொண்டிருந்த மரியாதையைப் பார்த்தீர்களா? ''அந்த பரிசுத்த மனிதர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல.'' அவர் வாசலண்டை வருவதை அவன் கண்டான். அவன், 'ஆண்டவரே, நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல'' என்றான். ஒருக்கால் அந்த நூற்றுக்கு அதிபதி ஒரு மாளிகையில் வாழ்ந்திருப்பான். ''நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல. நான் உம்மிடம் வருவதற்கு என்னைப் பாத்திரவானாக எண்ணவில்லை. எனவே தான் ஆசீர்வதிக்கப்பட்ட உம்முடைய மக்களாகிய யூதர்களில் சிலரை நான் உம்மிடம் அனுப்பினேன். என் வேலைக்காரன் வியாதியாயிருக்கிறான். என் அதிகாரத்துக்குப் கீழ்ப்பட்டிருக்கிற அநேகர் உண்டு. நான் ஒரு போர்ச்சேவகனை 'போ' என்றால் போகிறான். மற்றொருவனை 'வா' என்றால் வருகிறான்' என்றான். 81அவன் இங்கு என்ன சொன்னான்? 'உமது அதிகாரத்துக்கு எல்லாமே கீழ்ப்பட்டிருக்கிறது. நீர் இந்த வியாதியிடம் 'போ' என்றால் அது போகும், இதனிடம் 'வா'என்றால் அது வரும். பாருங்கள், அவன் அறிந்துகொண்டான். அவனுக்கு போர்ச் சேவகர் மேல் எவ்வாறு அதிகாரம் இருந்ததோ, அவ்வாறே இயேசுவுக்கும் எல்லா வியாதிகளின் மேலும் அதிகாரம் உண்டு என்பதை அவன் உணர்ந்தான். ''ஆண்டவரே, நீர்செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, வார்த்தையைச் சொல்லும் என்றான், அதுதான் ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் பிழைப்பான்.'' இயேசு அங்கிருந்த யூதர்களை நோக்கி, “இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை'' என்றார். அவர், ''உன் வேலைக்காரன் சுகமடைந்து பிழைத்திருக்கிறான் என்றார். ஆமென்.ஏன்? அவன் மரியாதை கொடுத்தான். அவன் பரலோகத்தின் தேவனாகிய இயேசுவிடம் மரியாதை கொண்டிருந்தான். 82நேரமாகிறது என்று நினைக்கிறேன். இன்னும் ஒன்றை மாத்திரம் கூற விரும்புகிறேன். இந்த மரியாதையெல்லாம்; ஆனால் இன்றைக்கோ அது வித்தியாசமாயுள்ளது. இன்று தேவன் ஏதாகிலும் ஒன்றை செய்தால், ஜனங்கள் அதை கண்டு கேலியாக சிரிக்கின்றனர். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பரிசுத்த ஆவி முதலில் விழுந்தபோது, அதை ஜனங்கள் ஏற்றுக் கொண்டிருந்தால், இன்று நாம் வித்தியாசமுள்ளவர்களாக இருப்போம் என்று நம்புகிறேன். ஆனால் அன்றிருந்த ஜனங்கள் என்ன செய்தனர்? போதகர்களை சிறையிலிட்டு பூட்டி, அவர்களை உருளும் பரிசுத்தர் என்றழைத்தனர். அவர்களுக்கு பட்டினத்தில் உணவளிக்க அவர்கள் மறுத்ததால், அவர்கள் ரயில் தண்டவாளத்தின் அருகில் சோளத்தை உடைத்து, தங்கள் வாழ்க்கையைக் கழித்தனர். ஜனங்கள் என்ன செய்தனர்? சபைக்கு நாற்பது ஆண்டுகள் இருந்தன. அவர்கள் இந்த காலத்தில் துன்பம் அனுபவித்தனர். இரண்டு உலகமாயுத்தங்கள் அதற்கிடையே நடந்து, பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஒருக்கால் அப்பொழுதே அதை ஏற்றுக் கொண்டிருந்தால், சபை இந்நேரம் வீடு சென்றிருக்கும். 83இந்த கடைசி நாட்களில் தேவன் பரிசுத்த ஆவியை ஊற்றத் தொடங்கினபோது, என்ன நடந்திருக்கும்? இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் அடையாளங் களையும் அற்புதங்களையும் அனுப்பின்போது, ஜனங்கள் மாத்திரம் அதை ஏற்றுக்கொண்டு ஒன்று சேர்ந்திருந்தால், என்ன நடந்திருக்கும்? ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள், 'இது மாந்தீரீகம், மனோவசியத்தத்துவம், அவன் மனோவசிய சக்தியினால் மனதிலுள்ளதை அறிந்து கூறுபவன். அவன் இது அது மற்றது என்றெல்லாம் கூறினர். எல்லா தேசங்களும் ஒன்று சேர்ந்து, ''கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக என்று கூறியிருந்தால், என்ன நேர்ந்திருக்கும்? மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து, ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம், இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். பரிசுத்த ஆவி இப்பொழுது ஊற்றப்படுகின்றது, மனிதர் தரிசனங்களைக் காண்கின்றனர். நமது மத்தியில் தீர்க்கதரிசனம் உரைப்பவர் இருக்கின்றனர், எல்லாவரங்களும் காணப்படுகின்றன -அந்நிய பாஷை பேசுபவர்கள் , தெய்வீக சுகமளிப்பவர்கள். இவையனைத்துமே நம் மேல் ஊற்றப்பட்டுள்ளது. தேவனுக்கு நன்றி, அது பெந்தெகொஸ்தேயினர் என்று அழைக்கப்படும் தாழ்மையுள்ள ஒரு கூட்டத்தாரின் மூலம் வந்துள்ளது. நாம் அனைவரும் வேதாகமத்துக்குத் திரும்பிச் செல்வோம். சதோதரரே, நாம் திரும்பிச் சென்று, நமது ஸ்தாபனங்கள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து நாமெல்லாரும் ஒருமித்து சகோதரராயிருப்போம்' என்று கூறியிருந்தால் என்னவாயிருக்கும்? எல்லா சபைகளும் ஒன்றாக இணைந்திருக்கும். அப்பொழுது என்ன நேர்ந்திருக்கும்?சகோதரனே, நாட்டில் ஒரு ஆஸ்பத்திரிக்கும் கூட அவசியம் இருந்திருக்காது. ஜனங்களின் மத்தியில் வரங்களும் அற்புதங்களும் வல்லமையாக கிரியை செய்து, அவ்வளவு மரியாதை இருந்திருக்கும். ஒருக்கால் சபை ஏற்கனவே வீடு சென்று, ஆயிரம் வருட அரசாட்சி தொடங்கியிருக்கும். 84ஆனால் அவர்களோ அதை அவமதித்தனர். அவர்கள் உருளும் பரிசுத்தர் என்று அவர்களை அழைத்தனர். செய்தித்தாள்கள் அவர்களைக் குறித்து அவதூறாக எழுத்தருணம் பார்த்துக் கொண்டிருந்தன. சபைகள் அதைக்கண்டு கேலி செய்து, சிரித்து, அவர்களை பட்டினங்களிலிருந்து புறம்பாக்கி, அவர்களை அவமதித்தன. இதைக் குறித்து இன்னும் அதிகமாகக் கூறலாம். ஆனால் நேரமாகின்றது. 85இப்பொழுது தயவு கூர்ந்து பிரான்ஹாம் கூடாரத்துக்கு வருவோம். தேவன் வரங்களை நம் மேல் ஊற்றத்தொடங்கி விட்டார். அதை நாம் காண்கிறோம். இன்றைய தேவனுடைய வரம் எது? அது பரிசுத்த ஆவி - நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவி. அதற்கு நாம் மரியாதை கொடுக்கவேண்டும். அது யார் மேல் எல்லாம் வருகின்றதோ, அவர்கள் ஒவ்வொருவரையும் நாம் மதிக்க வேண்டும். நாம் தேவனுடைய வரங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அவர் வரங்களை அனுப்பும்போது, அது எவ்வளவு தத்ரூபமாக இருந்தபோதிலும், அதற்கு மரியாதை செலுத்தும் நிலைக்கு நாம் வரும்வரைக்கும், அது நமக்குதவி செய்யாது. யாராகிலும் ஒருவர் தீர்ககதரிசனம் உரைக்கலாம். ஆனால் அந்த தீர்க்கதரிசனத்தை நீங்கள் நம்பாமல் போனால், அது உங்களுக்கு எந்த பயனையும் அளிக்காது. நீங்கள் பயபக்தியுடன் அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.அது தேவனிடத்தி லிருந்து வந்ததென்று நீங்கள் விசுவாசிக்கவேண்டும். அது தவறென்று நிரூபிக்கப்படும் வரைக்கும் அதை விசுவாசியுங்கள். அது தவறென்று நிரூபிக்கப்பட்டால், அதை விசுவாசிக்கமால் இருக்க உங்களுக்கு உரிமையுண்டு. அப்பொழுது நீங்கள் அதனுடன் எவ்வித தொடர்பும் கொள்ளவேண்டியதில்லை. ஆனால் அது சத்தியம் என்று நிரூபிக்கப்படும் வரைக்கும், நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். 86இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்ட போது, சாமுவேல் கூறின் விதமாக அவன், ''உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நான் எப்பொழுதாகிலும் உங்கள் பணத்தை அபகரித்ததுண்டா? என் ஜீவனத்துக்காக நான் எப்பொழுதாகிலும் உங்களிடம் கேட்டிருக்கி றேனா? நான் இதுவரை கர்த்தருடைய நாமத்தில் உரைத்த ஏதாகிலும் நிறைவேறாமல் போனதுண்டா?'' என்று கேட்டான். அவன், 'உங்களுக்கு ராஜா தேவையில்லை. உங்கள் ராஜா உங்களுக்கு ஒரு நன்மையும் செய்யமாட்டான்' என்றான். அவன், ''கர்த்தர் உரைக்கிறதாவது என்று நான் கூறின ஏதாகிலும் நிறைவேறாமல் போனதுண்டா? என்னும் கேள்வியைக் கேட்டான். ஜனங்களோ சாமுவேலை அவமதித்தனர். “ஓ, எங்களுக்கு சாமுவேலைத் தெரியும். அது உண்மை 'நீர் உரைத்த எதுவும் நிறைவேற வில்லை என்று நாங்கள் கூறவில்லை. இருந்தாலும், இந்த வழியில் நாங்கள் செல்ல விரும்புகிறோம். பாருங்கள்? நீங்கள் அப்படி செய்யக்கூடாது. நீங்கள் தேவனுடைய வழியில் அதை செய்ய வேண்டும். 87நாம் போதகருடன் கைகுலுக்குவதால் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதில்லை. பரிசுத்தஆவியைப் பெற்றுக் கொள்ளுதல் என்பது கிறிஸ்துவை உங்களுக்குள் ஏற்றுக்கொள்வதே. அவரே இந்த நாளின் செய்தியாளராக இருக்கிறார். பரிசுத்த ஆவி தேவனுடைய செய்தியாளர். அவருக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். அவர் வரும்போது, ''ஹீ!ஹீ !ஹீ! அந்த பெண் கூச்சலிடுவதைப் பாருங்கள். அவள் அழுது, கன்னங்களில் கண்ணீர் வடிகிறது. அந்த மனிதனைப் பாருங்கள். அவர் கைகளை ஆட்டிக்கொண்டு, உடல் நடுங்கி, அழுது கொண்டிருக்கிறார். அது யார் தெரியுமா? உணர்ச்சியை தங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளும் ஒரு கூட்டத்தார்“ என்று கூறாதேயுங்கள். நீங்கள் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக தேவதூஷணம் சொல்லுகிறவர்களா யிருப்பீர்கள். அதற்கு நீங்கள் மரியாதை கொடுக்கவேண்டும். 88சுமார் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஒரிகானில் இருந்தபோது, இரண்டு கத்தோலிக்க பெண் நிருபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கத்தோலிக்கர்களை விட பிராடெஸ்டென்டுகள் அதிகம் பேர் என்னைக் கேலி செய்கின்றனர். இந்த பெண்கள் ஒருபத்திரிகைக்கு செய்தியளிக்க அங்கு வந்திருந்தனர். அவர்கள் வந்ததும், அவர்களுடைய ஆவியை நான் பகுத்தறிந்தேன். நான், ''சரி. என்னைப்பற்றி என்ன குற்றம் உங்கள் மனதில் வைத்திருக்கிறீர்கள்?' என்று கேட்டேன். அந்த பெண் சிகரெட்டை எடுத்து பற்றவைக்கப் போனாள். நான்,''என் அறையில் உள்ள வரைக்கும் சிகரெட்டு பிடிக்க வேண்டாம்.''என்றேன். 89அவள் அங்கு உட்கார்ந்து கொண்டு என்னை இப்படி ஏற இறங்கப் பார்த்து விட்டு பேச ஆரம்பித்தாள். அவள், ''உங்களை சில கேள்விகள் கேட்கவேண்டும்“என்றாள். நான், “கேள்” என்றேன். அவள், “நீங்கள் இந்த உருளும் பரிசுத்தர் கூட்டத்துடன் ஏன் தொடர்பு கொண்டிருக்கிறீர்கள்? நீங்களும் அவர்களில் ஒருவரா?'' என்றாள். நான், “நானும் அவர்களில் ஒருவன் தான்” என்றேன். அவள், அதில் தேவபக்தியுள்ள ஏதாகிலும் உண்டு என்றா கூறுகின்றீர்கள்?“என்றாள். நான், 'கத்தோலிக்களாகிய நீ அதை நம்பமாட்டாய் என்றேன். அவள், ''நான் கத்தோலிக்கள் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?'' என்று கேட்டாள். நான், எனக்குத் தெரியும். உன் பெயர் என்ன வென்றும், நீயாரென்றும் என்னால் கூற முடியும்?'' என்றேன். அவள் திகைத்துபோனாள். அவள், ''பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிற இப்படிப்பட்ட ஜனங்கள் பரலோகத்துக்கு செல்வதாக கூறுகின்றனரே! அவர்களுடன் பரலோகத்தில் இருக்க எனக்கு விருப்பமில்லை என்றாள். நான், ''அதைக் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அப்படிப்பட்ட எண்ணம் கொண்டுள்ள வரைக்கும், நீ எப்படியும் அங்கு இருக்கப்போவதில்லை. எனவே அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம்'' என்றேன். 90நான் நின்று கொண்டு அவளுடைய முகத்தை உற்று நோக்கினேன். அப்பொழுது இரு சகோதரர்கள் கட்டிடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். நான் அவளிடம், 'எனக்கு உன் மீது கோபம் எழவில்லை. ஆனால் நீ எந்த நிலையில் இருக்கிறாய் என்பதை உனக்கு அறிவிக்க விரும்புகிறேன். நீ ஏதாவது குற்றம் கண்டு பிடித்து பத்திரிகையில் எழுதலாம் என்னும் எண்ணத் துடன் இங்கு வந்திருக்கிறாய். நான் உன்னிடம் கூறுவதை நீ எழுதப் போவதில்லை. உன் சொந்த கதையை ஜோடித்து நீ எழுதப் போகிறாய். நீ அப்படியே செய். ஆனால் ஒன்றை மாத்திரம் உன்னிடம் கூற விரும்புகிறேன். நீ வேண்டுமானால் அவதூறாக எழுது. ஆனால் நீ மரிக்கும் முன்பு என் சத்தம் உன் காதுகளில் தொனிக்கும். அப்படி நேராமலிருந்தால், நான் கள்ளத்தீர்க்கதரிசி என்று தீர்மானித்துக் கொள். நீ என்ன வேண்டுமானாலும் எழுது. அது உன்னைப் பொறுத்தது. நீ விரும்புவதை எழுத உனக்குரிமை அளிக்கிறேன். ஆனால் நீ மரிக்கும் முன்பு, என் சத்தம் உன் காதுகளில் உரக்க தொனிப்பதைக் கேட்பாய். அதனால் உனக்கு ஒரு நன்மையும் ஏற்படாது. நீ போய் என்ன வேண்டுமானாலும் எழுது'' என்றேன். 91அவள் சற்று நேரம் அங்கு நின்றாள். அவள், ''சென்ற இரவு கூச்சலிட்டுக் கொண்டிருந்த அந்த முட்டாள் கூட்டத்தாரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டாள். நான், அவர்களெல்லாரும் கிறிஸ்தவர்கள்' என்றேன். ''கிறிஸ்தவர்களா?'' 'நிச்சயமாக. அவர்கள் கிறிஸ்தவர்கள். அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிறைந்த கிறிஸ்தவர்கள்“ என்றேன். ''அது பரிசுத்த ஆவி அல்ல“ என்றாள் அவள். 'அப்படியானால் எதை பரிசுத்த ஆவி என்றழைப்பாய்?'' என்று கேட்டேன். அதைக்குறித்து அவள் கொண்டிருந்த கருத்தைப் பார்த்தீர்களா? 'உன்னிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன்“ என்றேன். அவள், அப்படிப்பட்ட கூட்டத்தாருடன் நான் தொடர்பு கொள்ள விரும்பவில்லை'' என்றாள். நான், ''நீ தொடர்பு கொள்ள விரும்பாததால் ஒரு பாதகமும் இல்லை. நீ தேவனுடனும் பரிசுத்தவான்களுடனும் தொடர்பு கொண்டிருந்தால் தானே, இவர்களுடன் தொடர்பு கொள்ள விரும்புவாய்'' என்றேன். அவள், ''வேதத்தில் கூறப்பட்டுள்ள பரிசுத்தவான்களா?'' என்றாள். நான், 'ஆம், உன் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாள். அவளை உன் தெய்வம் என்று அழைக்கிறாய் அல்லவா? அவளைத் தேவன் பரலோகத்தில் அனுமதிக்கும் முன்பு, அவள் பெந்தெ கொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி பெற்று, தேவனுடைய வல்லமையினால் ஆட்கொள்ளப்பட்டு, குடிபோதையிலிருந்த பெண்ணைப் போல் தடுமாற வேண்டியிருந்தது என்றேன். அவள், “அது சுத்தப் பொய்” என்றாள். 92நான், 'ஒரு நிமிடம் அமைதியாயிரு' என்று சொல்லிவிட்டு, வேதாகமத்தைத் திருப்பி, “இங்குபார். இந்த புத்தகத்தில் இங்குள்ளது என்றேன். அவள் தலையைத் திருப்பிக் கொண்டாள். நான், ''தேவனுடைய வார்த்தையைப் படிக்காமல் புறக்கணிக்க நீ அகந்தை கொண்டிருக்கிறாய் என்றேன். பாருங்கள்? அவள் அதை அவமதித்தாள். நான், “மேசையின் மேலுள்ள உன் சிகரெட்டு பாக்கெட்டை எடுத்துக்கொண்டு நீ போகலாம். நீ ஒன்றை அறிய விரும்புகிறேன். நீ என்ன வேண்டுமானாலும் எழுது. ஆனால் நான் கூறுகின்ற கடைசி வார்த்தைகளை ஞாபகம் வைத்துக்கொள். நீ மரிக்கும் முன்பு இதை ஞாபகம்கொள்வாய் என்று கர்த்தருடைய நாமத்தினால் உரைக்கிறேன், என்றேன். அவள் ஒன்றுமே எழுதவில்லை. அது உண்மை . அவள் எழுதாமல் விட்டு விட்டாள். அது என்ன? அவமரியாதை, கேலி செய்தல். அவர்கள் என்ன செய்கின்றனர் என்று அறியாமல் ஏதோ ஒன்றை செய்கின்றனர். உண்மை . 93இந்த கூடாரத்திலுள்ள நீங்கள் இவைகளை அறிந்து கொள்ள வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். தேவன் ஜனங்களின் மேல் பரிசுத்த ஆவியைப் பொழியும் போது, சில சமயங்களில் ஜனங்கள் ஆவியின் அபிஷேகத்தின் கீழ் மாம்சீக நிலையை யடைந்து, மித மிஞ்சிப் போய் விடுவதை (extremes) நான் கண்டிருக்கிறேன். அதைக் குறித்து நீங்கள் ஒன்றும் சொல்லாதீர்கள். அதற்கு மரியாதை கொடுத்து தலை வணங்குங்கள். ஒருக்கால் அது உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம், அது எனக்கும் புரிவதில்லை. ஆனால் என்னவாயிருந் தாலும், அதற்கு நான் மரியாதை கொடுக்க விரும்புகிறேன். நாம் தேவனுக்கு மரியாதை செலுத்த வேண்டும். தேவன் பரிசுத்த ஆவியை ஊற்றும்போது, நான் நன்றி செலுத்தி,''பரலோகப் பிதாவே, உமக்கு நன்றி. என்னைப்போல் உமது பரலோக வீட்டுக்கு என்றாகிலும் ஒரு நாள் வர வாஞ்சையாயுள்ள அந்த எளிய, விலையேறப்பெற்ற ஆத்துமாக்களுக்கு நீர் ஏதோ ஒன்றைச் செய்து கொண்டு வருகிறீர்“ என்று கூற விரும்புகிறேன். 94ஒருமுறை, ஊழியத்திலுள்ள ஒரு சகோதரன், அவரைக் குறித்து நான் அவதூறாகப் பேசினதாகக் கூறினதாக கேள்விப்படுகிறேன். நாங்கள் அந்த ஒலி நாடாக்களை அவருக்கு அனுப்பி வைத்தோம். அது சகோ. ஏ. ஏ. ஆலன். கைகளிலிருந்து இரத்தம் வருதல் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அடையாளம் என்று அவர் கூறிவருவதை நான் கேலி செய்ததாகக் கூறினார். அது இரத்தமும் எண்ணெயும் கைகளிலிருந்தும் நெற்றியில்லிருந்தும் வடிதல் என்று நினைக்கிறேன். அதை நான் கேலி செய்து, அது பிசாசின் செயல் என்று நான் கூறினதாக அவர் கூறினார். நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். நான், ''சகோ. ஆலன் அவர்களே ..... '''என்று எழுதினேன். அவர், ''அருமை சகோ.பிரன்ஹாம் அவர்களே“ என்று எனக்கு எழுதியிருந்தார். நீங்கள் அதைப் படித்தீர்கள். பாருங்கள்? அதைக் குறித்து அவர் என்னைச் சந்தித்து பேசுவதற்கு பதிலாக கைப்பிரதி களை அச்சிட்டு தேசம் முழுவதும் விநியோகம் செய்தார். 95நான் கூறினது இதுதான், நான், ''பீனிக்ஸில் ஆறு இரவுகள் நான் செய்த பிரசங்கங்களின் ஒலி நாடாக்களை உங்களுக்கு அனுப்பி நான் அப்படி கூறவில்லை என்று காண்பிக்கிறேன்'' என்றேன். லியோவும் மற்றவர்களும் அந்த ஒலிநாடாக்களை அவருக்கு அனுப்பிவைத்தனர். நான் அவரிடம்,''ஒரே ஒரு முறை தான் உம் பெயரை நான் கூற நேர்ந்தது, ஜனங்கள், சகோ. பிரன்ஹாமே, அண்மையில் சகோ.ஆலன் எங்கள் பட்டினத்துக்கு வந்திருந்தார். அவர், கைகளிலிருந்தும் முகத்திலிருந்தும் இரத்தம் வடிவதும், கைகளிலிருந்து எண்ணெய் வடிவதுமே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அடையாளம் என்று கூறினார். அதைக் குறித்து உங்கள் கருத்தென்ன? என்னும் கேள்வியை என் மேசை மேல் வைத்திருந்தனர். நான், 'அந்த விஷயத்தில் - அதாவது, அது தான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அடையாளம் என்பதில் - என்னால் சகோ. ஆலனுடன் இணங்க முடியாது. ஏனெனில் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் நிரூபணமாக வேதத்தில் யாருக்கு மேகைகளிலிருந்து இரத்தம் வடியவில்லை, கைகளிலிருந்தும் முகத்திலிருந்தும் எண்ணெய் கசியவில்லை. பரிசுத்த ஆவி என்பது அவர்களுடைய வாழ்க்கையில் காணப்படும் தேவனுடைய வல்லமை . இயேசு, 'விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்“ என்றெல்லாம் கூறினார். ஆனால் சகோ. ஆலனைப் குறித்து இதைக் கூறவிரும்புகிறேன். அவர் தேவனுடைய பெரிய மனிதர். எனக்கு சகோ. ஆலனைப் போல் அவ்வளவு திறமையாக பிரசங்கிக்க முடிந்தால், நான் சுகமளிக்கும் ஆராதனை நடத்தவே மாட்டேன், சுவிசேஷத்தை மாத்திரம் பிரசங்கிப்பேன் என்று தான் பதிலுரைத்தேன் என்று அவருக்குத் தெரிவித்தேன். பாருங்கள், யாரோ ஒருவர் கூறினதை வைத்துக் கொண்டு நான் அப்படி செய்தேன் என்று அந்த தாளில் அச்சடித்து விநியோகம் செய்து விட்டார். அந்த சகோதரனுடைய உபதேசத்தைப் பொருத்த வரையில் நான் அவருடன் இணங்காமல் போனாலும், நான் நிச்சயமாக அந்த சகோதரனுக்கு விரோதமாக தேவதூஷணம் உரைக்க மாட்டேன். 96அன்றிரவு மின்னசோட்டாவிலுள்ள மினியாபோலிஸ் என்னுமிடத்திலுள்ள பெரிய ஆலயத்தில் நான் காட்டன் பீட்டர்ஸன் என்பவருடன் இருந்தேன். சகோ. ஏ.ஏ. ஆலனுக்கு விரோதமாக அந்த புத்தகத்தை எழுதின மனிதன் அங்கு வந்திருந்தார். அவருக்கு விரோதமாக என்னெவெல்லாம் கூறமுடியுமோ, அது அனைத்தையும் அவர் அந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அவர்,''கடிக்கும் பிசாசுகள்' என்னும் புத்தகத்தை ஏ.ஏ. ஆலன் எழுதியுள்ளார். ஒரு பெண், பிசாசு தன் கையைக் கடித்ததாக கையில் அடையாளம் காண்பித்தாள் என்று அந்த புத்தகத்தில் அவர் எழுதி வைத்திருக்கிறார்' என்றார். (இது உண்மையா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் பிசாசு ஒரு ஆவி, பாருங்கள். இந்த பெண்ணோ , மேலெல்லாம் மயிர் வளர்ந்துள்ள ஒரு பெரிய பிசாசு அவள் கைகளையும் முகத்தையும் கடித்ததாக கூறுகிறாள்). ஆலனுக்கு விரோதமாக அந்த புத்தகத்தை எழுதினவர், என்னைக் குறித்து நல்ல கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். அவர் என்னைப் புகழ்ந்து, ஏ. ஏ. ஆலனை தரம் குறைவாகப் பேசினார். அவர் அன்றிரவு கூட்டத்திற்கு வந்துள்ளதாக சகோ.பீட்டர்ஸனும் மற்றவர்களும் எனக்கு அறிவித்தனர். 97சகோ. ஆலனின் சார்பில் பேசுவதற்கு அதுவே தருணம் என்று எண்ணினேன். நான்,செய்தித்தாளில் இந்த பட்டினத்திலுள்ள ஒருவர் எழுதின கட்டுரையைப்படித்துக் கொண்டிருந்தேன்...'' என்றேன் - அவர் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்று அறிந்தே. 'அவர் ஏ. ஏ.ஆலனைக் குற்றப்படுத்தி எழுதியுள்ளார். அவர் என்னைப் புகழ்ந்து எழுதியதை நான் பாராட்டுகிறேன். நான் பண ஆசை பிடித்தவன் அல்ல என்றும், அவர்கள் எல்லோரையும் விட நான் மிகவும் நல்ல கூட்டங்களை நடத்தி வருகிறேன் என்றும் அவர் எழுதியுள்ளார். அதை நான் பாராட்டுகிறேன். ஆனால் 'கடிக்கும் பிசாசுகள்' என்னும் புத்தகத்தை ஏ.ஏ. ஆலன் எழுதினார் என்று அவர் எழுதுவதற்கு முன்பு, அதை அவர் உறுதியாக அறிந்திருத்தல், அவசியம். ஆலன் அந்த புத்தகத்தை எழுதவேயில்லை. அந்த புத்தகத்தை எழுதினவரை எனக்குத் தெரியும். அவர் ஆலனைக் குறித்து எழுதிய இந்த தகவல் தவறாயிருக்குமானால், அவரைக் குறித்து அவர் எழுதிய மற்றைய விவரங்களும் தவறாயிருக்கலாமென்று நான் சந்தேகிக்கிறேன்'' என்று சகோ. ஆலனின் சார்பில் பேசினேன். நான் தொடர்ந்து, 'சகோ. ஆலன் தவறாயிருந்தாலும், அவர் கிறிஸ்துவினிடம் ஆத்துமாக்களைக் கொண்டு வருகிறார் என்னும் காரணத்தினால் அவருடன் கூட நான் நியாயத்தீர்ப்பில் நிற்பேனேயன்றி, அவர் புரியும் செயல்களில் நான் குற்றம் கண்டுபிடிக்கமாட்டேன் என்றேன். ஆமென். அது உண்மை . ஆம், ஐயா. 98இயேசு கிறிஸ்துவின் நாமத்தைக் கூப்பிடுபவர் எவரோ - அவர் பிராடெஸ்டெண்டு, கத்தோலிக்கர் யாராயிருந்தாலும் - அவருடன் நானும் இருக்கிறேன். அவருடைய உபதேசங் களுடன் நான் ஒத்துப்போகாமல் இருக்கலாம். ஆனால் அவரை கிறிஸ்துவின் ஊழியக்காரனாகவும் என் சகோதரனாகவும் மதிக்க விரும்புகிறேன். பாருங்கள்? அவர் என்ன செய்தபோதிலும், நாம் பரிசுத்த ஆவிக்கு மரியாதை செலுத்த வேண்டிய வர்களாயிருக்கிறோம். அது முற்றிலும் உண்மை . ஆம், ஐயா. அப்படி நாம் செய்யும் போது, தேவன் தமது ஆசீர்வாதங்களை நம் மத்தியில் ஊற்றுவார். இங்கு அமர்ந்துள்ள சிறு கூட்டம் - இன்றிரவு ஐம்பது, அறுபது அல்லது எழுபத்தைந்து பேர் இங்கு அமர்ந்துள்ளனர் - நாம் மாத்திரம் ஒன்றாக நம்மை இணைத்துக் கொண்டு, தேவனுக்கும், பரிசுத்த ஆவியானவர் இன்று செய்து வருபவைகளுக்காக அவருக்கும் மரியாதை செலுத்தி, நமது மத்தியில் அவர் அனுப்பியுள்ள ஒவ்வொரு வரத்தையும், ஒவ்வொரு உத்தியோகத்தையும் நாம் மதிப்போமானால், தேவன் தொடர்ந்து தமது ஆசீர்வாதங்களை நம்மேல் ஊற்றுவார். நமது எண்ணிக்கை அதிகரிக்கும். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் அல்லவா? நிச்சயமாக நாம் தேவனுக்கு மரியாதை செலுத்த வேண்டும். 99இப்பொழுது சற்று நேரம் ஜெபத்திற்காக தலை வணங்குவோம். நாம் ஜெபிக்கும் முன்பு, 'சகோ. பிரன்ஹாமே, நான் தேவனுக்கு மரியாதை செலுத்தவும், தேவனுடைய காரியங்கள் - அது என்னவாயிருந்தாலும் - அதற்கு விரோதமாக நான் பேசாமல் என் வாயை மூடவும், தேவன் சபைக்கு அனுப்பியுள்ள ஒவ்வொரு வாரத்துக்கும் நான் மரியாதை செலுத்த வேண்டுமென்றும், நீர் எனக்காக ஜெபிக்க விரும்புகிறேன்'' என்று கூற விரும்புகிறவர்கள் யாராகிலும் இங்குள்ளாரா என்று அறிய விரும்புகிறேன். அப்படியானால், உங்கள் கைகளையுயர்த்தி, எனக்காக ஜெபியுங்கள்' என்று கூறுவீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஏறக்குறைய சபையிலுள்ள எல்லா கரங்களுமே உயர்த்தப்பட்டுள்ளன. என் கையையும் நான் உயர்த்தியிருக்கிறேன். தேவனே, உமது ஊழியக்காரனாயிருக்க எனக்க உதவி செய்யும். என் சகோதரிக ளிடம் நான் மரியாதை காண்பிக்க எனக்கு உதவி புரியும். கூட்டத்தில் வந்துள்ள தேவனுடைய ஆவியின் வரங்கள் ஒவ்வொன்றையும் - அது அந்நிய பாஷை பேசுதல், பாஷைக்கு அர்த்தம் உரைத்தல், தீர்க்கதரிசனம், பகுத்தறியும் வரம் எதுவாயிருப்பினும் - நான், “ஓ, கர்த்தராகிய இயேசுவே, அவைகளை அனுப்பும். அவைகளை அனுப்பும், ஓ, ஆண்டவரே, உமக்கு நான் நன்றியுள்ளவனா யிருக்கிறேன்'' என்று கூறுவேன். 100பரலோகப் பிதாவே,நீர் மகத்துவமுள்ளவர், பயங்கரமான தேவன் என்பதை அறிந்திருக்கிறோம். உமக்கு கோபம் மூண்டால், அது மிகவும் பயங்கரமானது என்று நாங்கள் அறிவோம். தேவனுடைய கோபாக்கினை இந்த உலகத்தை ஒரு நொடிப்பொழுதில் அழித்துப்போட முடியும். ஆனால் நீர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைக் காணும்போது, உமது கோபம் மரைந்து விடுகிறது. ஓ, என்னை காலாகாலங்கள் தோறும் உள்ள கன்மலையில் (Rock of Ages) மறைத்துக் கொள்ளும் தேவனாகிய கர்த்தாவே, என் ஆத்துமாவை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மூடும். ஆண்டவரே, என் ஆத்துமாவை மாத்திரமல்ல, இங்குள்ள அனைவரின் ஆத்துமாக்களையும் கூட. கர்த்தாவே, உம்மை நாங்கள் நேசிக்கிறோம், நீர் எங்களுக்கு அளித்துள்ள ஒவ்வொரு வரமும்; அவர்கள் என்ன வேண்டுமானாலும் எங்களை அழைக்கட்டும், அது எங்களை .... அவர்களுக்கு அதனுடன் எவ்வித தொடர்பு கொள்ளவும் பிரியமில்லை. ஆனால் நாங்களோ மகத்துவமுள்ளவராகிய உமக்கு - மகத்தான பரிசுத்த ஆவிக்கு - இன்னமும் மரியாதை செலுத்தி வருகிறோம். பிதாவே, உம்மை நாங்கள் நேசிக்கிறோம். 101எங்கள் மத்தியிலுள்ள சுகமாக்கும் வரத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அந்நிய பாஷை பேசும் வரத்துக்காகவும், பாஷைக்கு அர்த்தம் உரைக்கும் வரத்துக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஓ, தேவனே,அந்த மகத்தான பரிசுத்த ஆவியின் வரங்களை நீர் தொடர்ந்து எங்கள் மத்தியில் அனுப்ப வேண்டுமென்று ஜெபிக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்டவரே, சகலத்துக்கும் போதுமான ஈவாகிய இயேசு கிறிஸ்துவை எங்களுக்கு நீர் அருளினதால், எங்கள் இருதயத்தில் உம்மை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். அவருடைய கிருபைக்காகவும், இரக்கத்துக்காகவும் உமக்கு நன்றி. அவர் கல்வாரியில் மிகுந்த வேதனைப்பட்டு, இரத்தம் சிந்தி, மற்றெல்லாவற்றையும் நாங்கள் பெற்றுக் கொள்ள எங்களைத் தகுதியுள்ளவர்க ளாக்கினார். அவரை விருப்பத்தோடே கேட்கும் சாதாரண ஜனங்களை அவர் பரிசுத்தமாக்குகிறார். கர்த்தாவே, நீர் சாதாரண ஜனங்களிடம் வருவதைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சியடை கிறோம், வேதத்திலே, லூக்கா சுவிசேஷத்தில், ''சாதாரண ஜனங்கள் அவரை விருப்பத்தோடேகேட்டார்கள்'' என்று நாங்கள் வாசிக்கிறோம் (மாற் 12:37- தமிழாக்கியோன்). இறுமாப்புள்ளவர்களும், ஐசுவரியவான்களும்; அப்படிப்பட்ட அநேகர் நீர் கூறுவதைக் கேட்க மறுத்தனர். இராஜாக்களும், சக்கரவர்த்திகளும், அக்காலத்தின்லிருந்த ஆசாரியர்களும் நீர் கூறுவதைக் கேட்க மறுத்தனர். ஆனால் சாதாரண ஜனங்களோ உம்மை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டனர். 102பிதாவே, இன்றிரவு நாங்கள் சாதாரண ஜனங்களாயிருக்கிறோம். நாங்கள் உம்மை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்கிறோம். அக்காலத்திலிருந்த சீஷர்கள் உமது நாமத்தினிமித்தம் நிந்தையை அனுபவித்தது மிகவும் அற்புதமான செயல் என்று கருதி, சந்தோஷத்துடன் திரும்பி வந்தனர். மற்றவர்கள் அவர்களை நிந்தித்து இழிவாகப் பேசினபோது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்தை அனுபவிக்க அவர்கள் பாத்திரராக எண்ணப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். பிதாவே, தேவனே, நாங்களும் அக்காலத்திலிருந்த சீஷர்களுடன் எங்களை இணைத்துக் கொண்டு, 'நாங்கள் சந்தோஷப் படுகிறோம்'' என்று கூறுகிறோம். இன்றிரவு நான் முன்காலத்து பவுலைப் போல் நிற்கிறேன். அவன் அகிரிப்பா ராஜாவின் முன்னால் நின்று, இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே- பைத்தியம் என்று அழைக்கிறபடியே - எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனை செய்து வருகிறேன்“ என்றான். அகிரிப்பா,'பவுலே, அதிகக் கல்வி உனக்குப் பைத்தியமுண்டாக்குகிறது'' என்றான். அவனோ, ''அகிரிப்பா ராஜாவே நான் பைத்திக்காரன் அல்ல''என்றான். முடிவில் அகிரிப்பா, நான் கிறிஸ்தவனாகிற தற்குக் கொஞ்சங் குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்று கூறும் நிலையையடைந்தான். அதற்கு பவுல், நீர், இந்தக் கட்டுகள் தவிர,முழுவதும் என்னைப் போலாகும்படி தேவனை வேண்டிக் கொள்ளுகிறேன்'' என்றான். 103ஓ,தேவனே, பவுலுக்கு எத்தகைய அன்பு இருந்தது! தன் ஜனங்கள் இரட்சிக்கப்படுவ தற்காக, அவனே சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவதாக கூறுகிறான். ஓ, பிதாவே, தேவனே, அப்படிப்பட்ட அன்பை நாங்கள் ஒருவருக்கொருவர் பெற்றிருக்க, அதை எங்களுக்கு அருள்வீராக. சாகாத அன்பை, கண்ணியத்தை, ஒருவருக் கொருவர் மதிப்பதை எங்களுக்குத் தாரும். மற்றவர்களுடைய தவறுகளை மறக்க போதுமான அளவுக்கு நாங்கள் கிறிஸ்தவர்களாயிருக்க கிருபையருளும். தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு மனிதன் தவறுசெய்யக்கூடும். ஓ, பிதாவே, பிசாசு அந்த விலையேறப் பெற்ற சகோதரனை கண்ணியில் அகப்படுத்தினான் என்பதை நாங்கள் உணர்ந்தவர்களாய், அந்த தவறுகளை நாங்கள் கவனியாமல் இருக்கச்செய்யும். அவ்வாறு கண்ணியில் அகப்பட்டுக் கொண்ட ஆணுக்கு அல்லது பெண்ணுக்கு எங்கள் இருதயத்தில் அன்பு கொண்டு, காணாமற்போன அந்த ஆட்டின் பின்னால் நாங்கள் சென்று அவர்களை மறுபடியும் மந்தைக்குள் கொண்டு வர உதவி செய்யும். ஆண்டவரே அதை அருள்வீராக. எங்களுக்கு விரோதமாய் குற்றஞ் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல், எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களை சோதனைக்குள் பிரவேசிக்கப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும். ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென். 104(சகோதரன். நெவில் ஒரு தீர்க்கதரிசன செய்தியை கொடுக்கிறார்.) “ஆம், என் ஜனமே, இந்த இரவில் நான் உமக்கு கூறுகிறதாவது, என்னுடைய ஊழியத்தை குறித்த காரியங்களை நீ புரிந்து கொள்ளும்படிக்கான இந்த விசேஷித்த தருணத்திற்க்கு உம்முடைய கவனத்தை நான் கோருகிறேன். ஆம், இந்த இரவில் நான் கூறுவது, நீ நன்றாக செய்தாய், எப்படியெனில் என்னுடைய ஊழியக்காரன் உம்மிடத்தில் பேசினபோது அவனுக்கு நீ செவிகொடுத்தாய். இந்த இரவில் திரும்பவும் அவனுடைய ஊழியத்தை நான் நிரூபித்து காட்டியிருக்கிறேன். (Vindicated). ஆம் என்னுடைய ஊழியக்காரனை, என்னுடைய தீர்க்கதரிசியை, இதோ, இந்நாளில் இந்த இரண்டுமுறை உங்களுடைய சமுகத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன். நான் கூறுவது, இந்த இரவில் உம்முடைய இருதயம் உமக்குள்ளாக உருகிடட்டும், காரணம் இந்த இரவு ஆராதணையில் நான் வெளிப்படுத்தியிருக்கிறேன், மேலும் இந்நாளில் இப்பகல் முழுவதும் நான் மறுபடியும் என்னுடைய தீர்க்கதரிசியின் அலுவலைக் குறித்து உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறேன். ஆம், நான் கூறுவது, இந்த இரவில் அவன் உங்களுக்கு கொண்டு வந்த இந்த காரியங்களுக்கு செவிகொடுங்கள், அப்பொழுது, இதோ உங்கள் வீட்டிற்கு வரக்கூடிய அநேக காரியங்களால் நான் உங்களுக்கு வெகுமதியளிப்பேன் (Reward). மேலும் ஒரு அன்பான தகப்பன் தன் பிள்ளைகள் மேல் அக்கறை எடுத்துகொள்வதுபோல, நானும் உங்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்வேன். இதோ, இந்த இரவில், என் ஊழியக்காரனே, ஆம், உம்மை நோக்கிப்பார்த்த இந்த மக்களின் பார்வையில் நான் உம்மை மறுபடியும் உயர்த்தியிருக்கிறேன். எனவே, நான் கூறுவது, என் ஊழியக்காரனே, ஆம், நான் உம்மோடு கூட இருக்கிறேன், ஆம், நான் இன்னும் உம்மோடு கூட தொடர்ந்து இருப்பேன், மேலும் உம்முடைய தீர்க்கதரிசி ஸ்தானத்தை பின்தொடரும் காரியங்களை உம்மிதாக கொண்டு வருகிறேன். ஆம், நான் உன்னை அநேக காரியங்களிலும், அநேக இடங்களிலும் உம்மை ஆசீர்வதிப்பேன். இன்றிரவு நான் கூறுவது, இந்த நேரத்தில் மக்களின் இருதயத்தில் நான் மறுபடியும் உறுதிப்படுத்துவது என்னவெனில், ஆம், நீ காண்கிற இந்த பிரச்சனைகளை நாம் சரிசெய்து கொள்ளக்கூடிய நேரம் இதுவே. என் ஜனங்களே, உங்களுடைய கண்களை திறந்து, இந்த இரவில் இதை பெற்றுக்கொள்ளுங்கள், மற்றும் தினமும் நான் அங்கத்தினர்களை குறைத்துபோடுகிறேன் காரணம் சிலர் விசுவாசிப்பதில்லை இருப்பினும், நான் கூறுவது என்னவெனில், நான் உங்கள் மத்தியில் இருந்து உங்களை மிகுதியாக ஆசீர்வதிப்பேன். இன்று இரவில் எனக்கு செவிகொடுத்து என்னிடத்திலும், என்னுடைய தீர்க்கதரியின் ஸ்தானத்துக்கும் உங்களுடைய இருதயத்தை திருப்புங்கள்” கர்த்தர் உரைக்கிறதாவது. கர்த்தாவே, உமக்கு நன்றி. பிதாவே, உமக்கு நன்றி. பரிசுத்தரே, உம்மைத் துதிக்கிறோம். பிதாவே, நீர் எவ்வளவு மகிமையுள்ளவரா யிருக்கிறீர்! கர்த்தாவே, உம்மை நாங்கள் எவ்வளவாக துதிக்கிறோம் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தை உணரவும், அவர் மானிட உதடுகளின் மூலம் பேசி, அவர் இன்னும் தேவனாய் எங்கள் மத்தியில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுதல் எங்களுக்கு எவ்வளவு ஆறுதல் தருகிறது! பிதாவே, இதற்காய் உமக்கு நன்றியுள்ளவர் களாயிருக்கிறோம். தொடர்ந்து எங்களுடன் கூட இருப்பீராக. நாங்கள் உமது ஜனங்களாயிருக்க, எங்களைப் பொறுத்துக் கொள்ளும். இயேசு கிறிஸ்துவின் மூலம் இவைகளைக் கேட்கிறோம். ஆமென். 105கிறிஸ்தவனாக இருப்பது மிகவும் அற்புதமல்லவா? தேவனையும் அவருடைய பிரசன்னத்தையும் உணர்வதென்பது மிகவும் அற்புதமல்லவா? இன்றைக்கே அவர் அதை இரண்டாம் முறை செய்தார் என்பதை நினைக்கும்போது இங்குள்ள சகோதரியிடம் அவர் ஒளிவடிவில் வந்து பேசினார். அவர்கள் செய்தியை விசுவாசித்ததால் அவர்களுடன் அவர் பேசினார். அவர் மகத்துவமுள்ளவர், இல்லையா? நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள் அல்லவா? எத்தனை பேர் உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும் அவரில் அன்பு கூறுகிறீர்கள்? அவர் அற்புதமானவர். நாம் எழுந்து நின்று அந்த பழைய பாடலை சேர்ந்து பாடுவோம். நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரிமரத்தில் ஓ, அவர் அற்புதமானவர் அல்லவா? அற்புதமானவர் புதன் இரவு நடக்கவிருக்கும் கூட்டத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த ஞாயிறு மறுபடியும் இங்கிருப்பேன். இந்த வாரம் முழுவதும் எங்களுக்காக ஜெபியுங்கள். இப்பொழுது நாம் ஜெபத்திற்காக தலை வணங்கும்போது, கடைசி வார்த்தைகளை உங்களிடம் கூறும்படியாக நமது போதராகிய சகோ. நெவிலை இப்பொழுது கேட்டுக் கொள்ளப்போகிறேன்.